• ராதாகிருஷ்ணன் மு முனைவர் பட்ட பகுதி நேர ஆய்வாளர் தமிழ்த்துறை - ஆய்வு மையம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம். (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரி)
  • அருள்மனோகரி பா உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, சங்கரன்கோவில் - 627 756
Section
Articles
Published
Pages
74-79

PDF

Abstract

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கியங்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. அவற்றுள் குறவஞ்சி இலக்கியம், இலக்கியச் சுவையுடன் அக்கால மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், கலைகள், தொழில்கள், சமூக உறவுகள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பதிவு செய்யும் சிறப்புடையதாக விளங்குகிறது. இவ்வகையில் “திருமலையாண்டவர் குறவஞ்சியில் பண்பாட்டுப் பதிவுகள்” என்னும் இவ்வாய்வு கட்டுரை திருமலையாண்டவர் குறவஞ்சியில் காணப்படும் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் கண்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் இறை நம்பிக்கை, கோயில் வழிபாடு, திருவிழா மரபுகள், போன்ற சமயப் பண்பாட்டுக் கூறுகள் முதன்மையாக ஆராயப்படுகின்றன. மேலும் குறவர் சமூகத்தின் வாழ்க்கைமுறை, குறிசொல்லும் மரபு, நாட்டுப்புற நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், சமூக உறவுகள், தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவையும் ஆராயப்படுகின்றன.

Keywords: மலைவளமும் இயற்கைப் பண்பாடும், வேடர் மற்றும் குறவர் வாழ்க்கை, குறிசொல்லுதல், ஆடை அணிகலன், இசை மற்றும் நாட்டுப்புறக்கலை, சமயம், திருமண முறை, முருக வழிபாடு, திருவிழா மற்றும் ஊர்வலம், மயில் வாகனம், இசை முழக்கம் மற்றும் மங்கல நிகழ்வு, குடைகள் மற்றும் யானை ஊர்வலம்

References

  1. திருமலையாண்டவர் குறவஞ்சி, கலைமகள் வெளியீடு, சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், மயிலாப்பூர் (1938)
  2. பதிப்பாசிரியர் - டாக்டர். உ.வே.சாமிநாதையர்