நேந்திரன் வாழைப்பழம் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. கேரளாவில் பிரபலமான நேந்திரன் பழத்தைவிட, கேரளா நேந்திரன் சிப்ஸ் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இனிமையைத் தாண்டி ஒரு ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. ஒரு வேளை உணவைத் தவிர்த்து, இந்தப் பழத்தை மட்டும் சாப்பிட்டாலே வயிறு நிறைவாக இருக்கும்.