Policies

Tamilmanam International Research Journal of Tamil Studies (TIRJTS)

Journal Policies

The Tamilmanam International Research Journal of Tamil Studies is dedicated to upholding the highest standards of academic publishing. The following policies outline our principles and procedures for authors, reviewers, and readers.


1. Open Access Statement

This journal provides immediate open access to its content on the principle that making research freely available to the public supports a greater global exchange of knowledge. All articles are published under an open license, which permits users to search, read, download, copy, distribute, print, or link to the full texts of articles for any lawful and ethical purpose, without financial, legal, or technical barriers other than those inseparable from gaining access to the internet itself.


2. Peer Review Policy

Tamilmanam International Research Journal of Tamil Studies (TIRJTS) employs a Double-Blind Peer Review Process for all submissions, including those for regular editions, special issues, and conference proceedings.

The journal operates on a double-blind peer review model to ensure the integrity and quality of our publications.

  • Process: Each manuscript is independently assessed by at least two subject matter experts. Reviewers are selected based on their expertise in the field.
  • Evaluation Criteria: Submissions are evaluated on their originality, methodology, academic rigor, clarity, and relevance to the journal’s scope.
  • Revisions: If revisions are required, the revised manuscript will be returned to the original reviewers to confirm that all necessary changes have been made to meet our publication standards.
  • Reviewer Responsibilities: Reviewers are expected to:
    • Maintain complete confidentiality of the review process.
    • Provide objective, constructive, and unbiased feedback in a timely manner.
    • Declare any potential conflicts of interest to the editor before or after agreeing to review.
    • Identify relevant published work that has not been cited by the authors.

Important Disclaimer: TIRJTS does not guarantee manuscript acceptance or expedited peer review timelines. Any claims made on behalf of TIRJTS promising such outcomes are invalid.


3. Publication Ethics and Malpractice Statement

We are committed to maintaining the integrity of the academic record. Our ethical policies are guided by the principles of transparency, fairness, and scholarly rigor.

  • Misconduct: The journal will professionally investigate all allegations of research or publication misconduct, including but not limited to plagiarism, data fabrication, citation manipulation, and authorship disputes.
  • Corrections and Retractions: The journal will issue corrections (errata), clarifications, retractions, and apologies when necessary. Authors may request corrections to their published work by providing a formal request and supporting documentation to the editor. All such notices will be made publicly and transparently on the journal’s website.
  • Predatory Practices: Any article found to be involved in predatory or unethical publishing practices will be retracted from the journal.

For a comprehensive overview of our ethical standards, please refer to our full https://tamilmanam.in/policies-updated/


4. Plagiarism Policy

The journal maintains a zero-tolerance policy towards plagiarism. We consider the unattributed use of another’s work, ideas, or language to be a serious breach of academic integrity.

  • All submissions must properly cite original sources and give credit to the intellectual work of others.
  • The editorial team reserves the right to screen submissions for originality using plagiarism detection software.
  • Any manuscript found to contain plagiarism, whether minor or significant, will be immediately rejected. If plagiarism is discovered after publication, the article will be retracted, and the authors’ institutions may be notified.

5. Article Submission and Selection Policy

  • Scope and Language: The journal specializes in publishing original research articles written in the Tamil & English language. We typically publish 20 to 30 articles per issue from a large volume of submissions.
  • Formatting Guidelines: Authors must format their manuscripts according to the guidelines of the Tamilmanam International Research Journal of Tamil Studies or the MLA Handbook, 8th Edition, for any English components (e.g., references).
  • Unethical Submissions: To protect the integrity of our journal, we do not evaluate submissions suspected of being generated by artificial intelligence (AI) or originating from fraudulent “paper mills.” If such a case is identified, the journal committee will investigate and may notify the relevant institutions (universities, research deans) to discourage academic malpractice.
  • Final Decision: The Editor’s decision regarding article selection is final.

6. Copyright and Licensing

The Tamilmanam International Research Journal of Tamil Studies (TIRJTS) believes in the principle of open access and author ownership. Authors who publish with this journal agree to the following terms:

  • Author Copyright: Authors retain full copyright of their work.
  • Right of First Publication: Authors grant TIRJTS the non-exclusive right of first publication.
  • Licensing: All articles published in TIRJTS are licensed under the Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0) license.
  • Permissions: This license permits any user to read, download, copy, distribute, print, search, or link to the full texts of articles, crawl them for indexing, pass them as data to software, or use them for any other lawful purpose, provided the original work is properly cited. A proper citation must include attribution to the author(s) and acknowledge the article’s initial publication in this journal.

License

Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

7. Author Declaration & Journal’s Process: TIRJTS does not require authors or submitters to provide a separate certificate or signed declaration attesting to plagiarism-free content. Instead, authors/submitters acknowledge their responsibility regarding content originality within the submission checklist in the Journal Management System. The Editorial Board solely relies on its internal plagiarism checks and reports, conducted according to this policy, for making acceptance decisions.

8. Simultaneous Submission Policy: To ensure integrity and avoid discrepancies in plagiarism reports, authors/submitters are strictly prohibited from submitting the same article or content to multiple journals or platforms simultaneously. Any such submission discovered during the review or editorial process will result in immediate rejection by the Journal’s Editorial Board without further consideration.

9. Publication Frequency and Schedule

The Tamilmanam International Research Journal of Tamil Studies (TIRJTS) is a monthly, peer-reviewed academic journal.

  • Regular Issues: The journal publishes twelve (12) regular issues per year, with one issue released each month.
  • Volume and Issue Numbering:
    • A new volume begins each calendar year. The first issue of a new volume is published in January (e.g., Volume 1 begins in January YYYY, Volume 2 begins in January YYYY+1).
    • Issues are numbered sequentially throughout the year (e.g., Issue 1 for January, Issue 2 for February, etc.).
  • Special Issues: In addition to its regular publishing schedule, TIRJTS may periodically publish Special Issues. These issues are dedicated to specific, timely themes, emerging research areas, or significant topics that fall within the scope of the journal.

10. Open Access Policy Statement

The Tamilmanam International Research Journal of Tamil Studies (TIRJTS) is an open access journal, meaning all published research articles are freely available online to users. Users are permitted to read, download, copy, distribute, print, search, or link to the full texts of these articles, and to use them for any other lawful purpose, as defined under applicable Copyright Policy and Law. This is contingent upon appropriate citation being given to the journal and proper credit attributed to the author(s), in accordance with the Budapest Open Access Initiative (BOAI) definition of open access (https://www.budapestopenaccessinitiative.org/).

செயல்திட்டம்

ஆய்விதழ் கொள்கைகள்

1. வெளியீட்டுக் கொள்கை மற்றும் மதிப்பாய்வுச் செயல்முறை (Publication Policy & Peer Review Process)

எமது ஆய்விதழில் கட்டுரைகள் இணைய வழியில் (Online) மட்டுமே வெளியிடப்படும். அனைத்துக் கட்டுரைகளும் இருமுக மறை மதிப்பாய்வு (Double-Blind Peer Review) முறைக்கு உட்படுத்தப்படும்.

  • மதிப்பாய்வு: பெறப்படும் ஒவ்வொரு கட்டுரையும், துறைசார் வல்லுநர்களைக் கொண்ட இரண்டு மதிப்பீட்டாளர்களுக்கு அனுப்பப்படும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரையின் தரம், உள்ளடக்கம், ஆய்வு நெறிமுறை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து தங்களது பரிந்துரைகளை வழங்குவார்கள்.
  • திருத்தங்கள்: மதிப்பீட்டாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கட்டுரையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில், அது குறித்து ஆய்வாளருக்குத் தெரிவிக்கப்படும். ஆய்வாளர் திருத்தப்பட்ட கட்டுரையை மீண்டும் சமர்ப்பித்த பிறகு, அது ஆசிரியர் குழுவால் இறுதி செய்யப்படும்.
  • வெளியீடு: திருத்தங்கள் அனைத்தும் நிறைவுற்று, ஆசிரியர் குழுவின் ஒப்புதல் பெற்ற கட்டுரைகள் மட்டுமே PDF வடிவத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • மதிப்பீட்டாளரின் கடமைகள்:
    • கட்டுரைகளுக்குத் தரமான, ஆக்கப்பூர்வமான மதிப்பாய்வை வழங்க வேண்டும்.
    • தங்களுக்கு நல முரண்பாடுகள் (Conflict of Interest) ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • கட்டுரையில் கருத்துத் திருட்டு (Plagiarism) அல்லது மேற்கோள் பிழைகள் இருப்பின், அதனை ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
    • மதிப்பாய்வுச் செயல்முறையின் இரகசியத்தன்மையைப் பேண வேண்டும்.

2. கருத்துத் திருட்டுத் தவிர்ப்புக் கொள்கை (Anti-Plagiarism Policy)

கருத்துத் திருட்டு என்பது அறிவுசார் நேர்மைக்கு எதிரான ஒரு குற்றம். எனவே, எமது ஆய்விதழ் கருத்துத் திருட்டை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒவ்வொரு படைப்பாளரின் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதிசெய்வது எங்கள் தலையாய கடமையாகும். கருத்துத் திருட்டு கண்டறியப்படும் கட்டுரைகள் உடனடியாக நிராகரிக்கப்படும்.

3. கட்டுரைத் தேர்வுக் கொள்கை (Article Selection Policy)

எமது ஆய்விதழுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வருகின்றன. எனினும், ஆய்வின் தரம், புதுமை மற்றும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 20 முதல் 30 சிறந்த கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.

  • கட்டுரைகளைத் தேர்வு செய்வது அல்லது நிராகரிப்பது தொடர்பான ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
  • பணம் செலுத்துவதற்காக எழுதப்படும் கட்டுரைகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை மற்றும் தரம் குறைந்த ஆய்வுகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
  • கட்டுரை தொடர்பான நெறிமுறை மீறல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆய்வாளர்/மாணவர்/ஆசிரியரின் கல்வி நிறுவனம் அல்லது துறைத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்.

4. பதிப்பு நெறிமுறைகள் மற்றும் முறைகேடு அறிக்கை (Publication Ethics & Malpractice Statement)

எமது ஆய்விதழ், பதிப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளது. ஆய்வு மற்றும் பதிப்புச் செயல்பாடுகளில் உயர்தரத்தை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

  • ஆய்வில் முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டால், அக்கட்டுரை உடனடியாக வெளியீட்டிலிருந்து நீக்கப்படும்.
  • ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரையில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின், ஆய்வாளர் ஆசிரியர் குழுவிற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் கட்டுரை நீக்கம் (Retraction), திருத்தங்கள் (Corrections), விளக்கங்கள் (Clarifications) மற்றும் மன்னிப்புக் கோரல் (Apologies) ஆகியவை வெளியிடப்படும்.
  • இந்த ஆய்விதழின் அனைத்து வெளியீடுகளும் இணையத்தில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும் (Digital Archiving).

திறந்தநிலை அணுகல் மற்றும் உரிமம் (Open Access & Licensing)

1. திறந்தநிலை அணுகல் கொள்கை (Open Access Policy)

இது ஒரு திறந்தநிலை அணுகல் (Open Access) ஆய்விதழ் ஆகும். இங்கு வெளியிடப்படும் அனைத்துக் கட்டுரைகளும் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும். புடாபெஸ்ட் திறந்தநிலை அணுகல் முன்னெடுப்பின் (BOAI) வரையறையின்படி, வாசகர்கள் பின்வரும் செயல்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்:

  • கட்டுரைகளைத் தடைகளின்றி வாசிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம், நகலெடுக்கலாம், விநியோகிக்கலாம் மற்றும் அச்சிடலாம்.
  • கட்டுரைகளின் முழு உரைக்கும் தேடலாம் அல்லது இணைப்பு வழங்கலாம்.
  • மூலப் படைப்பிற்கும் ஆசிரியருக்கும் உரிய அங்கீகாரம் (Proper Citation) வழங்கும் பட்சத்தில், சட்டப்பூர்வமான வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம்.

2. உரிமம் (License)

இந்த ஆய்விதழில் வெளியிடப்படும் அனைத்துப் படைப்புகளும் கிரியேட்டிவ் காமன்சு அட்ரிபியூசன் 4.0 பன்னாட்டு உரிமத்தின் (Creative Commons Attribution 4.0 International License – CC BY 4.0) கீழ் வழங்கப்படுகின்றன.

இந்த உரிமத்தின்படி, மூலக் கட்டுரையையும் அதன் ஆசிரியரையும் முறையாக மேற்கோள் காட்டும் பட்சத்தில், வாசகர்கள் அக்கட்டுரையைப் பகிரவும், திருத்தி அமைக்கவும், அதன் அடிப்படையில் புதிய படைப்புகளை உருவாக்கவும் முழு உரிமை பெறுகிறார்கள்.

பதிப்புரிமை, உரிமம் மற்றும் வெளியீட்டு உரிமைகள் கொள்கை

  • பதிப்புரிமை தக்கவைப்பு: பதிப்பாளர் ஆசிரியர்களின் உரிமைகளை முழுமையாக மதிக்கிறார். தமிழ்மணம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (TIRJTS) வெளியிடப்படும் அனைத்துப் படைப்புகளின் பதிப்புரிமையும் அந்தந்த ஆசிரியர்(களிடமே) தக்கவைக்கப்படுகிறது. இதன் மூலம், ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
  • திறந்த அணுகல் மற்றும் உரிமம்: தமிழ்மணம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (TIRJTS) வெளியிடப்படும் அனைத்து உள்ளடக்கங்களும் கிரியேட்டிவ் காமன்சு அட்ரிபியூசன் 4.0 பன்னாட்டு உரிமத்தின் (CC BY 4.0) கீழ் ‘திறந்த அணுகல்’ கொண்டவை. இந்த உரிமத்தின்படி, படைப்பின் மூல ஆசிரியரைக் குறிப்பிட்டு, யார் வேண்டுமானாலும் அதனைப் பகிரவும், பயன்படுத்தவும், தழுவி உருவாக்கவும் சுதந்திரம் வழங்கப்படுகிறது.

வெளியீட்டு கால அட்டவணைக் கொள்கை

தமிழ்மணம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் (TIRJTS) மாதாந்திர வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு முறை பின்வருமாறு:

  • ஒவ்வொரு தொகுதியின் முதல் இதழ் (எ.கா., தொகுதி 1, இதழ் 1, ஆண்டு YYYY) அந்தந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்கள் (இதழ் 2, 3, …) ஆண்டு முழுவதும் மாதந்தோறும் வெளிவரும்.
  • ஒவ்வொரு புதிய தொகுதியும் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தொடங்கும் (எ.கா., தொகுதி 2, இதழ் 1, ஆண்டு YYYY+1).
  • வழக்கமான இதழ்களுக்குக் கூடுதலாக, ஆய்விதழின் நோக்கத்திற்குப் பொருத்தமான குறிப்பிட்ட ஆய்வுப் பகுதிகள் அல்லது உலகளாவிய சவால்களை மையப்படுத்தி, TIRJTS சிறப்பு இதழ்களையும் வெளியிடும்.