தமிழ்ச் சமுதாயம் மற்றும் தமிழ்க் கணினி ஆராய்ச்சியாளருக்கும் பயன்படுவதற்காக தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு, அரசாணை எண் (2D) 26, நாள் 15.10.2015 மூலம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamilnadu Innovative Initiatives scheme) திட்டத்தின்கீழ் 2015ஆம் ஆண்டிற்காக ரூ. 1.5 கோடி தொகை வழங்கியுள்ளது. இந்நிதி உதவியுடன் 15 மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள் கண்டறியப்பட்டு திட்டச் செயலாக்கம் நடைபெற்று வருகின்றது.
அதில் தமிழிணையம் ஒருங்குறிமாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி எழுத்துருக்கள் என்ற 2 திட்டங்கள் முடிவுற்று அத்திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 23.05.2017 அன்று தொடங்கி வைத்தார். தற்போது கீழ்க்கண்ட 10 திட்டங்கள் முடிவுற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.