திருக்குறளில் குறிப்பிடப்படும் மரங்கள்
திருக்குறளில் சில மரங்களின் பெயர்கள் நேரடியாகவும், சில மரங்கள் பொதுப்படையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள மரங்களைப் பற்றி இங்கு காண்போம். நேரடியாகக் குறிப்பிடப்படும் மரங்கள்: திருக்குறளில் இரண்டு மரங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பனை மரம் மற்றும் மூங்கில் மரம் ஆகும். பனை மரம்: பனை மரம் திருக்குறளில் மூன்று குறட்பாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்” “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.” “தினைத்துணையும் ஊடாமை…