சங்க இலக்கியத்தில் முல்லைத்திணையும் கற்பு நெறியும்: நிலவுடைமைச் சமூக மாற்றத்தின் பிரதிபலிப்பு
Author: S.Veerakannan, Deputy Librarian, NGM College – Pollachi சுருக்கம்: சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பிரிவில் முல்லைத்திணை, தலைவியின் “கற்பு” நெறியை மையமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. சமூக வரலாற்றின் போக்கில், குலக்குழு நாகரிகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகமாக மாறும் காலகட்டத்தில், கற்பு என்ற கருத்தாக்கம் எவ்வாறு வலுப்படுத்தப்பட்டு, பெண்களின் மீது திணிக்கப்பட்டது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. தனிச்சொத்துரிமையின் தோற்றமும், குடும்ப அமைப்பின் உருவாக்கமும் கற்பு வரையறைகளுக்கு எவ்வாறு அடிகோலின என்பதையும், இத்தகைய மாற்றங்கள் முல்லைத்திணைப் பாடல்களில் பிரதிபலிக்கப்படுவதையும்…


