Volume: 01 Issue : 01
வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்
முனைவர். அ. லோகமாதேவி
நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி , logamadevi@ngmc.org,
நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி , logamadevi@ngmc.org,
Abstract:
நம் தமிழ்மொழியின் பல்வேறு வகை இலக்கியங்களில் வழியே. அறம், பொருள், இன்பம், வாழவேண்டிய முறை, கலை, பண்பாடு, நாகரிகம் இயற்கை, அறிவியல் என உலகின் பல்வேறு வாழ்வியல் கூற்றுக்களை மிகத்தெளிவாகவே நாம் அறிந்துகொள்ளலாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சூழல் மண்டலம் பல்உயிரி, சுற்றுச்சூழல் கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து வெகு காலம் முன்னரே நம் தமிழ் இலக்கியங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. சங்க இலக்கியங்களிலும் தாவர அறிவியல் தகவல்களை பல பாடல்களிலும் விரிவாய் காணலாம்.
தாவர அறிவியல் பற்றிய செய்திகள் நவீன தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்பதை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதி வரும் வெண்முரசு நவீன நாவல் தொடரின் சில பாகங்களிலிருந்து இந்தக்கட்டுரையில் காணலாம்.
. ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க, மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ள எழுத்தாளர்களில் ஒருவர் ..வெண்முரசு எனும் இந்த நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன.. 12 புத்தகங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மாமலர் எனும் 13 ஆவது தொடர் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது. தாவரங்களையும் தாவரவியலையும் குறித்து வெண்முரசு கூறும் தகவல்கள் மற்றும் சித்தரிப்புகள் அனைத்துமே இந்நாளைய தாவரவியல் கருத்துக்களுக்கு மிகச்சரியாக ஒத்தும் சிறந்தும் விளங்குகின்றன