உலகெங்கும் தமிழ் மொழி பரவி வாழ்ந்து வருகிறது. தாய் தமிழகத்தை மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழாய்வு என்பது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. நம்முடைய இயல், இசை, நாடகம் போன்ற பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி, மொழியியல், சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, ஊடகவியல், கலையியல், கணிப்பொறியியல், ஏன் அறிவியல் போன்ற பல புதிய துறைகளிலும் தமிழாய்வின் எல்லை விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழாய்வுக்காக அதிக எண்ணிக்கையில் புதிய ஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன.
தமிழாய்வு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. அது ஒரு சமூகத்தின் அடையாளம். அதன் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் விழுமியங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. உலக அளவில் தமிழின் பெருமையை நிலைநாட்டவும், தமிழின் தொன்மையை எடுத்துரைக்கவும், புதிய ஆய்வுகள் வெளிவருவது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆய்வும், தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் உலகிற்கு உணர்த்தும் சான்றுகளாக அமையும்.
இந்த அவசியத்தை உணர்ந்து, “தமிழ்மணம் சர்வதேச தமிழாய்விதழ்” என்ற பெயரில் ஒரு தரமான ஆய்விதழ், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால், இது மட்டும் போதாது. இன்னும் பல ஆய்விதழ்கள் உருவாக வேண்டும். அப்போதுதான், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் தமிழாய்வுகள் வெளிச்சத்திற்கு வரும்.
ஆகவே, தமிழாய்வில் ஆர்வமுள்ள பல்வேறு துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தங்கள் சிறந்த, புதிய ஆய்வுக் கட்டுரைகளை இந்த ஆய்விதழுக்கு அனுப்பலாம். குறிப்பாக, கல்வித்துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், தமிழின் மீது தீராத பற்று கொண்டு, தமிழாய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிற துறை சார்ந்த நிபுணர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் தமிழாய்வு குறித்து ஆழமான கட்டுரைகளை அனுப்பும்போது, ஆய்விதழின் நோக்கம் மேலும் விரிவடையும்.
இந்த ஆய்விதழ் தரமானதாக வெளிவர தமிழாய்வில் உண்மையான அக்கறை உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். உங்கள் பங்களிப்பு, தமிழாய்வு உலக அரங்கில் மேலும் சிறந்து விளங்க உதவும். தமிழின் பெருமையை உலகறியச் செய்ய, “தமிழ்மணம்” ஆய்விதழுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்! தரமான ஆய்வுக் கட்டுரைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.
The Need for New Research Journals in Tamil Studies on the Global Stage
The Tamil language is spoken in many countries around the world. Beyond Tamil Nadu, Tamil studies are continuously being conducted in numerous universities and educational institutions internationally. Extending beyond the traditional boundaries of Iyal (Literature), Isai (Music), and Natakam (Drama), Tamil research has expanded into various fields such as Linguistics, Sociology, Anthropology, Folklore, History, Media Studies, Art, Computer Science, and even Science. In accordance with this growth, there is a greater need for new research journals dedicated to Tamil studies.
Tamil research is not just an academic exercise. It is an identity of a society. It encompasses its history, culture, art, literature, and values. It is extremely important to publish new research to establish the greatness of Tamil on a global level and to explain the antiquity of Tamil. Each study will serve as evidence of the depth and breadth of Tamil to the world.
Therefore, experts, professors, and researchers from various fields who are interested in Tamil studies can submit their best and new research articles to this research journal. In particular, not only those in the education sector, but also experts from other fields who have an insatiable passion for Tamil and are actively involved in Tamil research can contribute. When small magazine writers send in-depth articles on Tamil studies, the purpose of the research journal will be further broadened.
The cooperation of everyone who has a genuine interest in Tamil studies is essential for this research journal to be of high quality. Your contribution will help Tamil studies to excel further on the world stage. Let’s work together with the “Tamilmanam” research journal to make the greatness of Tamil known to the world! Quality research articles are always welcome.