இணையவெளியில் தமிழாய்வுகள்: அனைத்துலக கவனம் பெற என்ன செய்ய வேண்டும்?
தமிழாய்வு என்பது தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இலக்கணத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மொழியியல், இனவரைவியல், தொல்லியல், நாடகவியல், வரலாறு, நுண்கலைகள், தகவல் தொடர்பியல், இதழியல், சூழலியல், பெண்ணியம், சமயம், மெய்யியல் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்த ஒரு பரந்த கல்விப்புலமாக விரிவடைந்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கின்றனர். மேலும், காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிடும் போக்கும் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா,…