பண்டைக்காலத்தில் விழா – ஆடிப்பெருக்கு
விழா என்ற தலைப்பைப் பார்த்ததும், என் மனதில் நீண்ட காலமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரு விழாவைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அது சோழர் காலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே ஆகும். குறிப்பாக, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தபோது, இந்த விழாவைப் பற்றி நான் பலமுறை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழ…