தமிழ் இலக்கியத்தில் மானுட விழுமியங்கள்

எஸ். வீரக்கண்ணன் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி

Authors

  • எஸ். வீரக்கண்ணன் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி Author https://orcid.org/0000-0003-1006-158X

Keywords:

மானுட விழுமியங்கள், பெண்ணியத் திறனாய்வு

Abstract

மானுட வரலாற்றில் பெண்கள் தங்கள்அடையாளங்களை மெல்ல இழந்து சுயமற்ற நிலையில் காணப்படுகின்றனர். வரலாற்றில் பெண்களின் முக்கியமான, ஆற்றல் மிக்க பங்களிப்புகளின் சில குறிப்புகள் இருந்தாலும், அவர்கள் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு, உதைக்கப்பட்ட குறிப்புகள்தாம் பரவலாக உள்ளன. பல நூற்றாண்டுகளாகப்  பெண்கள் அவ்வாறு துன்புறுத்தப்பட்டதுமில்லாமல் பிறப்பு, முன்னோர் கருத்து, கடவுள் கொள்கை என்று அவை நியாயப்படுத்தப்பட்டு பண்பாடு என்ற பெயரால் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. பெண், ஆண் இடையே இன்று நாம் காணும் வேறுபாடுகள் இயல்பானவையல்ல. அவை ஒரு காலத்தில் ஒருவராலோ, அல்லது சிலராலோ, வர்க்க, இன, சமய, பால், மத அடிப்படையில் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆண் உயர்ந்தவன் என்பதும் பெண் தாழ்ந்தவள் என்பதும் இயற்கையும், கடவுளும் உருவாக்கியவை அல்ல.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • எஸ். வீரக்கண்ணன், நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி

    எஸ். வீரக்கண்ணன் 
    நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி 

References

1.6.1. பெண்ணியத் திறனாய்வு - தொகுப்புரை

1. ஆண், பெண் இடையே இன்று நாம் காணும் வேறுபாடுகள் இயற்கையால் உருவாக்கப்பட்டவை அல்ல.

2. அதிகாரப் போட்டியில் வெற்றிபெற்ற ஆணினம் உருவாக்கிய ஆண் - பெண் கருத்தியல்கள் காரணமாகவே பெண் நிலை தாழ்ந்த நிலையடைந்தது.

3. பெண்ணடிமைத்தனத்தின் மூலம் ஆண் பல சலுகைகளைப் பெற்றதால், பண்பாட்டின் பெயரால் பெண்ணைத் தலைமுறை தலைமுறையாக அடக்கி வைக்கப் பல புனைந்துரைகளை ஆண் உருவாக்கினான்.

4. உலகின் மிக நீண்ட விடுதலைப் போராட்டம் பெண் விடுதலைப் போராட்டமே ஆகும்.

5. அமெரிக்காவிலும் ஒரோப்பாவிலும் தோன்றிய பெண் உரிமை எழுச்சி, உலகம் முழுவதும்பெண்ணிய இயக்கங்களுக்கு வித்திட்டன.

6. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அன்று. ஆதிக்கத்திற்கு எதிரானதே.

7. மிதவாதப் பெண்ணிய இயக்கம் தொடங்கி பல பெண்ணிய இயக்கங்கள் தோன்றி பெண்களின் உரிமைக்காகப் போராடி வருகின்றன.

8. பெண்ணிய இலக்கியத் திறனாய்வு என்பது இலக்கியங்களில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆணாதிக்கக் கருத்தியலைக் கண்டறிந்து பெண் பற்றிய போலியான கருத்தியல்களை இனங்காட்டுவதாகும்

Downloads

Published

2024-11-01

How to Cite

தமிழ் இலக்கியத்தில் மானுட விழுமியங்கள்: எஸ். வீரக்கண்ணன் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி. (2024). Tamilmanam International Research Journal of Tamil Studies, 1(2), 77-86. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/14

Similar Articles

You may also start an advanced similarity search for this article.

Most read articles by the same author(s)