பழங்காலத் தமிழரின் வணிக நுட்ப அறிவு: ஒரு ஆய்வு
சுருக்கம்: பழங்காலத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வாழ்வில் வணிகம் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. சங்க இலக்கியங்கள், பிற்காலக் கல்வெட்டுகள், வெளிநாட்டினர் குறிப்புகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் வாயிலாகப் பழங்காலத் தமிழர்கள் கடல்வழி மற்றும் தரைவழி வணிகத்தில் சிறந்த நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் என்பது புலனாகிறது. அவர்களின் வணிகத் திறன்களில் துறைமுகங்களின் அமைப்பு, கப்பல் போக்குவரத்து அறிவு, சந்தை மேலாண்மை, வணிகக் குழுக்களின் ஒருங்கிணைப்பு, பொருள்களின் தரம் பிரித்தல், விலை நிர்ணயம், மற்றும் வணிக நெறிமுறைகள்…