இணையவெளியில் தமிழாய்வுகள்: உலக அரங்கில் கவனத்தை ஈர்க்கும் வழிகள்
தமிழாய்வு என்பது வெறும் இலக்கியம் மற்றும் இலக்கணத்தை மட்டும் உள்ளடக்கியதல்ல; அது மொழியியல், இனவரைவியல், தொல்லியல், நாடகவியல், வரலாறு, நுண்கலைகள், தகவல் தொடர்பியல், இதழியல், சூழலியல், பெண்ணியம், சமயம், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்த ஒரு பரந்த களம். இன்று, உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் தமிழாய்வுத் துறையில் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளை ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகின்றனர். மேலும், தரமான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிடும் போக்கும் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி,…