சுருக்கம்
இவ்வாய்வு மனித உடலின் இயக்கம், உயிரியல் தகவமைப்பு, இயற்கையின் உணவுச் சுழற்சி மற்றும் மனிதநேயக் கல்வி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு விரிவான வாழ்வியல் மெய்யியலை முன்வைக்கிறது. உயிரற்ற மின்னணு சாதனங்களைக் நுணுக்கமாகக் கையாளும் நவீன மனிதன், உயிருள்ள தன் உடலின் இயக்கம், வாழ்வின் நோக்கம் மற்றும் "நான் யார்?" என்ற சுய அறிவை கல்வி மூலமாக வழங்குவதற்கு தவறி வருகிறோம். மனிதனின் தோலின் நிறம் மற்றும் வெளிப்புற உடலமைப்பு மாறுபாடுகள் நீண்டகால உயிரியல் தகவமைப்பே தவிர, உயர்வு தாழ்வு அல்ல. "கருவறையும் ஒன்றே! கல்லறையும் ஒன்றே!" என்பதற்கிணங்க மனித இனம் பிறப்பிலும் இறப்பிலும் சமமானது. மனித உடல் என்பது இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல உள்ளுறுப்புகளின் பரஸ்பர ஒத்துழைப்பால் இயங்கும் கூட்டமைப்பாகும். இயற்கையின் உணவுச் சுழற்சி, தாவர-விலங்கு வேதியியல் தொடர்பு மற்றும் அறுசுவையின் அறிவியலைப் புரிந்து கொண்டு சமச்சீர் உணவை உண்பதே உடலின் வேதியியல் சமநிலையைப் பேணி, "ஆயுசு நூறு" ஆயுளை நல்கும். தொழில்நுட்பக் கல்வி என்பது "சித்திரம்"; சுய அறிவும் மனிதநேயமும் அதைத் தாங்கும் "சுவர்". இளைஞர்கள் 18 வயதில் சுய அறிவையும், உலகளாவிய மனிதநேயத்தையும் பெறுவதை நாட்டை ஆள்பவர்களும் கல்வி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும். இத்தகைய மெய்யியல் பார்வையை இளைஞர்களிடம் விதைப்பதே வன்முறையற்ற, போர்களற்ற அமைதி உலகை உருவாக்க வழிவகுக்கும்.
திறவுச்சொற்கள்
- சுய அறிவு (Self-Realization)
- மானுடச் சமத்துவம் (Human Equality)
- உயிரியல் தகவமைப்பு (Biological Adaptation)
- உள்ளுறுப்புகளின் பரஸ்பர ஒத்துழைப்பு (Interdependence of Internal Organs)
- வேதியியல் சமநிலை (Biochemical Balance)
- அறுசுவை உணவு (Six-Taste Diet / Balanced Nutrition)
- மனிதநேயக் கல்வி (Humanistic Education)
- உலக அமைதி (Global Peace)
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
13 references- தமிழ் இலக்கிய சான்றுகள் (Tamil Classical & Canonical Texts)
- 1. திருவள்ளுவர். (2014). திருக்குறள் உரைக்கோவை (சாலமன் பாப்பையா, உரை.). மணிவாசகர் பதிப்பகம்.
- 2. திருமூலர். (2018). திருமந்திரம் (நிரம்ப அழகிய தேசியிகர், உரை.). சாரதா பதிப்பகம்.
- 3. ஒளவையார். (2012). மூதுரையும் கொன்றைவேந்தனும் தமிழ் உரையும். வானதி பதிப்பகம்.
- 4. தொல்காப்பியர். (2010). தொல்காப்பியம்: பொருளதிகாரம் (சு. துரைசாமிப் பிள்ளை, உரை.). தமிழ்ப் பல்கலைக்கழகம்.
- 5. கணியன் பூங்குன்றனார். (2015). புறநானூறு (பாடல் 192). சங்க இலக்கியம்: எட்டுத்தொகை (பக். 412–415). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
- 6. பாரதியார், சி. (2008). பாரதியார் கவிதைகள் (முழுத் தொகுப்பு). விஜயா பதிப்பகம்.
- ஆங்கில நூல்கள் மற்றும் சர்வதேச ஆய்வுச் சான்றுகள் (English Books & International References)
- 1. Darwin, C. (1859). On the origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life. John Murray.
- 2. Jablonski, N. G., & Chaplin, G. (2000). The evolution of human skin coloration. Journal of Human Evolution, 39(1), 57–106. https://doi.org/10.1006/jhev.2000.0403
- 3. Natterson-Horowitz, B., & Bowers, K. (2012). Zoobiquity: What animals can teach us about health and the science of healing. Vintage Books.
- 4. UNESCO. (1945). Constitution of the United Nations Educational, Scientific and Cultural Organization. UNESCO Documents. https://www.unesco.org/en/legal-affairs/constitution
- 5. World Health Organization. (2020). Healthy diet: Key facts. World Health Organization Guidelines. https://www.who.int/news-room/fact-sheets/detail/healthy-diet
மேற்கோள் காட்டுவது எப்படி
மானுடத்தின் மெய்யியல்: சுய அறிவும், இயற்கைச் சமநிலையும், உலக அமைதிக்கான கல்வியும்: Philosophy of Humanity: Integrating Evolutionary Equality, Biochemical Balance, and Educational Metaphors for Global Peace. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 214-232. https://doi.org/10.63300/tm12052026.17