சுருக்கம்

வேள்பாரி புதினம் இயற்கையோடு இணைந்த வாழ்வை பறைசாற்றுகிறது. மனிதன் முதலில் சீழ்க்கை ஒலி வாயிலாக தனது தகவல் தொடர்பை மற்றவர்களுடன் பரிமாறிக் கொண்டான். பின்னர் தகவல்கள் தூது வழியாக பறவை மற்றும் விலங்குகள் மூலம் சென்றடைந்தது. தற்போதுள்ள காலகட்டங்களில் கணினி மற்றும் திறன்பேசி வழியாகவும் இன்னும் பல தொழில் நுட்பங்கள் மூலமும் தகவல்கள் மக்களிடையே சென்றடைந்துள்ளன. வேள்பாரி புதினம் சங்க காலப் பின்னணியைக் கொண்டது. நவீன கால தொழில்நுட்பங்கள் எதுவும் அன்றைய காலகட்டங்களில் இல்லெயெனினும் இயற்கையின் துணை கொண்டு அவர்கள் தகவல்களைக் கடத்தினர். வரலாற்றுப் புதினங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைப் புனைவின் வழி வெளிப்படுத்துகின்றன. இயற்கையின் வழியாக மக்கள் எவ்வாறு தகவல் தொடர்பு மேற்கொண்டனர் அதன்வழி அவர்கள் வாழ்வை செம்மையுற அமைத்தனர் என்பது குறித்து நாம் அறிய முடிகிறது. இப்புதினத்தில் மூவேந்தர்களால் அழிக்கப்ட்ட குலங்கள் பாரியிடம் அடைக்கலம் புகுகின்றனர். இவர்கள் அவர்களின் தகவல் பரிமாற்றம் குறியீடு வழியாக அமைந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

மேற்கோள்கள்

6 references
  1. கம்பராமாயணம், ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், 2018, சென்னை
  2. புறநானூறு மூலமும் உரையும் புலியுர் கேசிகன் (உ.ஆ) முதற்பதிப்பு 2010, சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை-14.
  3. அகநானூறு மூலமும் உரையும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (தொ.ஆ) சாரதா பதிப்பகம், மூன்றாம் பதிப்பு 2019, ராயப்பேட்டை, சென்னை-14.
  4. Tamil oneindia.com
  5. ta.m.wikipedia.org
  6. சிறுமணவூர், முனிசாமி முதலியார், விஷவைத்திய சிந்தாமணி, கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு

மேற்கோள் காட்டுவது எப்படி

வேள்பாரி புதினத்தில் தகவல் தொழில்நுட்பம். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 89-95. https://doi.org/10.63300/c42vjc82

ஒத்த கட்டுரைகள்

64-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.