சுருக்கம்
புண்ணிய மாதமாம் மார்கழித் திங்களின் மங்கை ஒன்று கூடி மாதவனை, இருள் விலகும் வைகறைப் பொழுதில் சென்று வழிபடக்கூடிய ஓர் அற்புதமான பக்தி இலக்கியம் ஆண்டாள் அருளிய திருப்பாவை.
ஆயர் குலத்து தோழிப் பெண்களின் உறக்கம் கலைத்து, அனைவரும் இறைவனாம் பேரொளியை நோக்கி ஒரு பெரும் கூட்டத்தை வழிநடத்திய ஆண்டாளின் திருப்பாவை பக்திப்பேழை மட்டுமல்ல, அது உன்னதமான தகவல் தொடர்பியல் (communication science) கலைக் களஞ்சியம்
சில நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒரு செய்தியைத் திரளான மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்ற தொடர் பாடல் நெறியை ஆண்டாள் தன் பாசுரங்களால் ஆளுமையுடன் கையாண்டுள்ளதைக் காணலாம்.
இவ்வாய்வு, ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களில் பொதிந்துள்ள இருவழித் தகவல் தொடர்பு (Two-way communication), குறியீட்டியல் உத்திகள் (Semiotics), நேர்மறை ஊக்கப்படுத்துதல் (Positive motivation), குழுத்தொடர்பாடல் போன்ற நவீன தகவல் தொடர்பியல் கூறுகளை, சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம் போன்ற பிற தமிழ் இலக்கிய பேராளுமைகளின், மேற்நோக்கங்களோடு ஒப்பிட்டு, அதன் அறிவியல் தன்மையை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
பறவைகள் அதிகாலையில் எழுப்பும் “குக்கூ’ ஒலிகள், கருவானம் சிவந்து கதிரவன் புறப்படும் முன் தோன்றும் விடியலின் அழகையும் செய்தியை கடத்தக் கூடிய சிக்னல்களாக மாற்றிய ஆண்டாளின் காட்சி வழிக் குறியீடுகள் (Visual Signs), ஒவ்வொரு இல்லத்தின் வாயில்களின் நின்று, நயம்படப் பேசி, உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் மங்கையரின் உறக்கம் கலைக்கும் இருவழி உரையாடல் உத்திகள்,“வையத்து வார்வீர்காள்” என்று உலகத்தோரை அறைகூவல் விடுக்கும் வெகுஜனத் தொடர்பு (Mass communication) ஆகிய இவையாவும் ஆண்டாளை ஒரு சிறந்த நவீன தொடர்பியல் நிபுணராகப் பறைசாற்றுகிறதெனில் அது மிகையாகாது.
மேற்கோள்கள்
5 references- ஆண்டாள் அருளிய திருப்பாவை (கி.பி. 8ம் நூற்றாண்டு)
- திருக்குறள் - திருவள்ளுவர் மூலம் உரையும் தமிழ் இணையக் கல்விக்கழக வெளியீடு
- சுப்புரெட்டியார் (1962) ஆண்டாளின் பிள்ளைத்தமிழ் மற்றும் திருப்பாவை விளக்கம்.
- மு.வரதராசனார் (1972) தமிழ் இலக்கிய வரலாறு
- எஸ்.இராம கிருஷ்ணன். பக்தி இயக்கமும் தமிழ் கம்யூனிகேஷன் - ஓர் ஆய்வு.