God Murugan in Tirumurukatruppatai: A Review of the Six Faces

Temples form the soul of India, representing a source of pride and cultural heritage on a global scale. The deities, festivals, profound philosophies, intricate arts, and significant cultural monuments intrinsically linked to these temples contribute to a worldwide awareness of our nation’s greatness. Divine power is believed to reside within these sacred spaces, offering protection and fulfilling the desires of devotees who seek solace and blessings. Those who have experienced this divine power have composed devotional hymns, capturing their spiritual experiences in verses filled with devotion, philosophical insights, and personal encounters with the divine. Nakkeerar, in his Tirumurukatruppatai, shares his profound divine experience towards Lord Murugan. This article explores the activities and significance of the six faces of Lord Arumuga as depicted in this revered Tamil hymn, aiming to provide a deeper understanding of Nakkeerar’s portrayal of the deity.

பௌத்த சங்கப் பெண்களின் சுதந்திரக் குரல்கள்

பௌத்த சங்கத்தில் பெண்களின் பங்களிப்பு மத மற்றும் சமூக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். சங்கப் பெண்கள், அல்லது பிக்குணிகள், தங்கள் ஆன்மிகப் பயணத்தில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கோரியதன் மூலம் பாரம்பரிய பாலின பாகுபாடுகளை சவால் விட்டனர். இந்த ஆய்வுக் கட்டுரை, சங்கப் பெண்களின் சுதந்திரக் குரல்களை ஆராய்ந்து, அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதிக்கிறது. குறிப்பாக, பௌத்த நூல்களில் காணப்படும் பெண்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சமூக தடைகள் ஆகியவற்றை…

சங்கத் தமிழர் மரபும் மடலேறுதலும்

பண்டைய தமிழர்கள் தங்கள் மரபுகளைப் போற்றிப் பாதுகாப்பதிலும், முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதிலும் மிகுந்த கவனம் செலுத்தினர். அவர்களின் மரபே இந்தச் சிறப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. பழக்கம், வழக்கம், மரபு ஆகிய மூன்றும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை; எளிதில் மாற்ற முடியாதவை. “பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்தது, வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்தது, மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு” எனலாம். அந்த வகையில், பழக்கமாகி வழக்கமாக நிலைபெற்ற மடலேறுதல் பற்றிய தகவல்களைத் தொகுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நூலகங்களில் செயற்கை நுண்ணறிவு: மறுமலர்ச்சியும், வாய்ப்புகளும், சவால்களும்

நூலகங்களில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence – AI) ஒருங்கிணைப்பு, பாரம்பரிய நூலகச் சேவைகளை மறுவடிவமைத்து, பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், செயல்பாடுகளை எளிதாக்கவும் புதிய சாத்தியக்கூறுகளை வழங்குகிறது. டிஜிட்டல் உலகம் விரிவடைந்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு நூலகங்களில் ஒரு புரட்சிகரமான போக்காக உருவெடுத்துள்ளது. இது பாரம்பரிய நூலகச் சேவைகளையும், செயல்பாடுகளையும் மாற்றியமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயனர் அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், செயல்பாடுகளை எவ்வாறு விரைவுபடுத்தலாம், தகவல் மேலாண்மையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள…

வெண்முரசு-மகாபாரதம் காட்டும் தாவரவியல் தகவல்கள்

நம் தமிழ்மொழியின் பல்வேறு வகை இலக்கியங்களில் வழியே. அறம், பொருள், இன்பம், வாழவேண்டிய முறை, கலை, பண்பாடு, நாகரிகம் இயற்கை, அறிவியல் என உலகின் பல்வேறு வாழ்வியல் கூற்றுக்களை மிகத்தெளிவாகவே நாம் அறிந்துகொள்ளலாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சூழல் மண்டலம் பல்உயிரி, சுற்றுச்சூழல் கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து வெகு காலம் முன்னரே நம் தமிழ் இலக்கியங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. சங்க இலக்கியங்களிலும் தாவர அறிவியல் தகவல்களை பல பாடல்களிலும் விரிவாய் காணலாம்.

தாவர அறிவியல் பற்றிய செய்திகள் நவீன தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்பதை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதி வரும் வெண்முரசு நவீன நாவல் தொடரின் சில பாகங்களிலிருந்து இந்தக்கட்டுரையில் காணலாம்.

. ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க, மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ள எழுத்தாளர்களில் ஒருவர் ..வெண்முரசு எனும் இந்த நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன.. 12 புத்தகங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மாமலர் எனும் 13 ஆவது தொடர் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது. தாவரங்களையும் தாவரவியலையும் குறித்து வெண்முரசு கூறும் தகவல்கள் மற்றும் சித்தரிப்புகள் அனைத்துமே இந்நாளைய தாவரவியல் கருத்துக்களுக்கு மிகச்சரியாக ஒத்தும் சிறந்தும் விளங்குகின்றன

தமிழ், வங்காளத் தொன்ம மறுவாசிப்புப் புதினங்களில் ‘சீதை’ தொன்மம்

மனிதச் சமூகம் காலந்தோறும் பெறும் அனுபவங்களின் வெளிப்பாடாக அமைவன தொன்மங்கள். கடந்தகாலத்தின் நினைவுகளையும் வரலாற்றையும் பண்பாட்டையும் நிகழ்காலத்திற்குக் கடத்தி வருபவையாக இத்தொன்மங்கள் செயல்படுகின்றன. அவ்வகையில் சமூகத்தின் பிரதிபலிப்பாக அமையும் இலக்கியங்களிலும் இத்தொன்மங்கள் காலந்தோறும் செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன. இந்தியச் சூழலில் புராணங்களைச் சார்ந்த தொன்மங்கள் இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. அவற்றில் ‘சீதை’ தொன்மம் முதன்மையானது. அதனடிப்படையில் தமிழ், வங்காளத் தொன்ம மறுவாசிப்புப் புதினங்களில் ‘சீதை’ தொன்மம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது

பண்டைய இந்திய நாணயங்களும் பாதுகாக்கும் வழிமுறைகளும்

பண்டைய இந்திய நாணயங்கள், இந்தியாவின் பெரும்பான்மையான பணதுறையில் முக்கியமான ஊடகங்கள் ஆக இருக்கின்றன. இவை வெள்ளி, தாமிரம், மாமிசம் போன்ற விலைமதிப்புடைய உலோகங்களில் கையாளப்பட்டன. நாணயங்கள், ஒருங்கிணைப்பின் SIM பரிமாற்றத்தின் அடிப்படையில், வணிகம், பொருளாதாரம் மற்றும் பணத்தொடர்பு போன்ற துறைகளில் செயல்படுவதற்கான அடித்தளமாகவும் விளங்கின. இந்த ஆராய்ச்சியின் நோக்கம், பண்டைய இந்திய நாணயங்களின் வரலாறு, அவற்றின் வகைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை விளக்குவதாகும்.

Vol. 1 No. 1 (2024): Tamilmanam October 2024 Issue

மானிடவியல் பார்வையில் பிரெஞ்சியர் ஆட்சி புதுச்சேரியின் சமூக பண்பாட்டுச் சிக்கல்களும் மதப் பூசல்களும்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகநாடுகள் நாகரிக வாயிலைத் தொடுவதற்கு முன்னரே கவிதை, இலக்கிய வகையில் தன்னிகரின்றி தமிழர்கள் தலைநிமிர்ந்த வரலாறு நாடறிந்த உண்மையாகும். சங்ககாலத் தமிழர்களின் பண்பாடு, அரசியல், சமூக வரலாற்றிற்கு நேரடி குறிப்புகள் எதுவும் இல்லை எனினும், அக்காலத்திய இலக்கிய படைப்புகளும், கல்வெட்டுகளும், வெளிநாட்டவரின் குறிப்புக்களும் ஆதாரங்களாக உள்ளன. இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறையே அக்காலத்தில் இருந்தது என முழுமையாக நம்புகிறவர்களும் உண்டு. இலக்கியப் படைப்புகள் இலட்சிய வாழ்வின் எதிர்பார்ப்புகளாக இருந்தன எனக் கருதுவாரும் உண்டு. எப்படியாயினும் சங்க காலத் தமிழர் வாழ்வு சீரும் சிறப்பும் கொண்டு சிறப்புடன் இருந்தது என்பதில் ஐயமில்லை. பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய புதுவையின் பண்பாட்டு வரலாறும், வாழ்வும் தமிழகத்தோடு இணைந்திருந்தன. அரிக்கமேடு அகழ்வாய்வுகளும், புதுவை பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளும் புதுவையின் இலக்கியச் சிறப்பினை, வாழ்க்கை வளத்தை, அயல்நாட்டு தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரியில் மதம் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் இரண்டு வகைகளாகப் பிரிந்து மதம் பரப்புவதில் அழுத்தத்தைக் காட்டி வந்தனர். அவர்களிள் ஒருவகை கப்பூச்சின் பாதிரிமார்கள் என்றும், மற்றொரு வகை சேசுசபை பாதிரிமார்கள் என்றும் இரு பெரும் பிரிவுகளாக இருந்து தங்களின் கிறிஸ்துவ மதத்தை பூர்வகுடிகளின் மத்தியில் பரப்பி வந்தனர். மற்றும் பலதரப்பட்ட சிக்கல்களையும், தடைகளையும் பூர்வகுடிகளின் இந்து மதத்திற்கும், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் கொடுத்து வந்தனர். மேலும் இந்துக்களுக்குள் வலங்கை, இடங்கை என்னும் இரு பெரும் பிரிவுகளாக மக்கள் பிளவுபட்டு, இருவேறு பெரும் துருவங்களாக சமூகத்தில் எப்பொழுதும் பலதரப்பட்ட பூசல்களில் ஈடுபட்டு வந்தனர். மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பலதரப்பட்ட சிக்கல்களும், அழுத்தங்களும் நடைபெற்றுள்ளன. இவையனைத்தையும் மானிடவியல் பார்வையில் ஒரு இனவரலாற்று அடிப்படையில் இதுவரையில் யாரும் ஆய்வுகள் செய்யவில்லை என்பதால், மானிடவியல் ஆய்வாளர் என்ற முறையில் பிரன்ச்சு புதுச்சேரியின் பண்பாட்டு அசைவுகளை இந்த ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்து வழங்குகின்றேன். ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரும், புதுவை விடுதலைப் பெற்ற காலத்திற்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில், புதுவையின் பூர்வீகக்குடிகளான தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளையும், சமூக வளர்ச்சியின் வரலாற்றையும், சமூக பண்பாட்டு மாறுதல்களையும், முரண்பாடுகளையும் தெளிவாக வரலாற்று ஆவணங்களின் அடிப்படை உதவியுடன் இந்த ஆய்வுக்கட்டுரையில் காணலாம்.