Section
Articles
Received
Published
Pages
153-160
Reads
8 views · 3 downloads

PDF

Abstract

பிச்சிப் பூ நாவல் குமரி மாவட்ட நாடார்கள் பற்றிய ஒரு சமூக ஆவணமாக விளங்குகிறது. சிறப்பாக குமரி மாவட்ட நாடார்கள் ஆதிக்க, அதிகார வர்க்கத்தினரால் எதிர்கொண்ட பண்பாட்டு ஒடுக்கு முறையையும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு அடையாளப் போராட்டங்களையும் இக்கட்டுரை கவனத்தில் கொள்கிறது. தமிழகத்திலே சாதிய ஒடுக்கு முறைக்கானச் சிந்தனைகள் பார்ப்பணிய மேலாண்மைக்குப் பிறகே தொடங்குகிறது. பார்ப்பணிய மேலாண்மைக்குப் பிறகு ஆதிக்க சாதியினர் அடித்தள மக்களை ஒடுக்குவோராக விளங்கினாலும் அந்த ஒடுக்குமுறை காவல்துறை, இராணுவம் போன்ற அரசின் அடக்குமுறை இயந்திரங்கள் வருவாய்த்துறை, நீதித்துறை போன்ற நிர்வாக அமைப்புகள் மூலமாக மட்டுமே நிகழவில்லை. பண்பாட்டு ஒடுக்குமுறை வாயிலாகவும் ஆதிக்க சாதியினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களிடம் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டியுள்ளனர் என்பதை நாவலின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. பண்பாட்டு ஒடுக்கு முறையானது குமரி மாவட்ட நாடார்களிடம் ஆதிக்க சாதியினரால் பொதுக் குளத்தில் நீர் எடுக்கத் தடை, செருப்பு அணிய அனுமதி மறுத்தல், ஆளுவோரின் பாலியல் வன்முறை, கல்வி கற்கத் தடை, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு போன்ற நிலைகளில் வெளிப்பட்டதைக் கட்டுரை முன்வைக்கிறது .அதோடு அதற்கு எதிராக நாடார் சாதியினர் மேற்கொண்ட பண்பாட்டு அடையாளப் போராட்டங்களையும் இக்கட்டுரை பதிவு செய்கிறது .

Keywords: இனவரைவியல், இனமையவாதச் சிந்தனை, சாணாக் குடி, சிதிலமடைந்து

References

  1. சிவசுப்ரமணியன்., 2002: அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை-002.
  2. மேலது., 2014: இனவரைவியலும் தமிழ் நாவலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 098.
  3. பக்தவத்சல பாரதி., 2014: இலக்கிய மானிடவியல், அடையாளம் பதிப்பகம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி - 621310.
  4. பொன்னீலன்.,2019: பிச்சிப் பூ (நாவல்)
  5. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 098.

Cite this article

மி, ஜென்ஸிஸ் குமார். (2026). குமரி மாவட்ட நாடார்களும் பண்பாட்டு ஒடுக்குமுறையும் (பொன்னீலனின் பிச்சிப் பூ நாவலை முன்வைத்து). Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 153–160. https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/