- கட்டுரையாளர்களுக்கு For authors
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Frequently Asked Questions
கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சுருக்கமான பதில்கள். வேறு கேள்வி இருந்தால் ஆசிரியர் அலுவலகத்துக்கு எழுதுங்கள்.
Quick answers for authors and readers. For anything else, write to the editorial office.
கேள்விகளும் பதில்களும் Questions and answers
தமிழ்மணம் சக மதிப்பாய்வு இதழா? Is Tamilmanam peer reviewed?
ஆம். ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையும் வெளியீட்டுக்கு முன் குறைந்தது இரண்டு தனித்த மதிப்பாய்வாளர்களின் இருதரப்பு மறைவு மதிப்பாய்வுக்கு உட்படுகிறது.
Yes. Every research article receives double-blind review from at least two independent reviewers before publication.
இது திறந்த அணுகல் இதழா? Is the journal open access?
ஆம். கட்டுரைகள் வெளியானவுடனே, பதிவு ஏதுமின்றி, CC BY 4.0 உரிமத்தில் படிக்கவும் பதிவிறக்கவும் இலவசம்.
Yes. Articles are free to read and download as soon as they are published, with no registration, under a CC BY 4.0 licence.
வெளியிட எவ்வளவு செலவாகும்? How much does it cost to publish?
சமர்ப்பிப்பு இலவசம். கட்டுரை ஏற்கப்பட்ட பின் மட்டுமே ₹1,000 கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் கோரப்படும்.
Submission is free. The article processing charge of ₹1,000 is requested only after a manuscript is accepted.
கட்டண விலக்கு கிடைக்குமா? Can I get a fee waiver?
ஆம். கட்ட இயலாதவர்கள் சமர்ப்பிக்கும்போதோ செலுத்தும் முன்போ முழு அல்லது பகுதி விலக்கு கோரலாம்; முடிவு ஆசிரியர்களுடையது. விலக்குக் கோரிக்கை ஆசிரியர் முடிவைப் பாதிக்காது.
Yes. Authors who cannot pay may ask for a full or partial waiver when they submit or before they pay; the editors decide. A request does not affect the editorial decision.
எந்த மொழிகளில் வெளியிடலாம்? In which languages can I publish?
தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச்சொற்கள் இரு மொழிகளிலும் வெளியாகும்.
Articles may be in Tamil or English. Titles, abstracts and keywords appear in both languages.
கட்டுரையை எப்படிச் சமர்ப்பிப்பது? How do I submit a manuscript?
கட்டுரையாளர் வழிகாட்டியின்படி ஒருங்குறித் (Unicode) தமிழ் அல்லது ஆங்கில .docx கோப்பைத் தயாரித்து இணையப் படிவம் வழியாகச் சமர்ப்பியுங்கள். உடனே கட்டுரை எண் கிடைக்கும்.
Prepare a Unicode Tamil or English .docx file following the Author Guidelines and submit it through the online form. You receive an Article ID at once.
மதிப்பாய்வுக்கு எவ்வளவு காலமாகும்? How long does review take?
முதல் முடிவு பொதுவாக ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும்.
The first decision usually comes within one to two weeks.
கட்டுரையின் நிலையை எப்படி அறிவது? How can I track my manuscript?
கட்டுரை எண்ணையும் மின்னஞ்சலையும் கொண்டு நிலை அறியும் பக்கத்தில் பாருங்கள்; அல்லது உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் உள்ள இணைப்பைத் திறவுங்கள்.
Use the tracking page with your Article ID and email address, or open your author workspace through the link in your confirmation email.
அச்சுப் படி கிடைக்குமா? Is there a printed edition?
ஆம் (p-ISSN 3107-7781). ₹500க்கு அச்சு இதழும் அச்சுச் சான்றிதழ்களும் இந்தியாவுக்குள் அஞ்சலில் அனுப்பப்படும்; இது விருப்பத்தின் பேரில் மட்டும்.
Yes (p-ISSN 3107-7781). For ₹500 the printed issue and hard-copy certificates are posted within India; it is optional.
இதழின் ISSN என்ன? What is the ISSN of the journal?
இணையம்: ISSN 3049-0723; அச்சு: ISSN 3107-7781. DOI முன்னொட்டு: 10.63300.
Online: ISSN 3049-0723; print: ISSN 3107-7781. DOI prefix: 10.63300.
பதிப்புரிமை யாருக்கு? Who owns the copyright?
கட்டுரையாளர்களுக்கே; இதழுக்கு முதல் வெளியீட்டு உரிமை மட்டும் அளிக்கப்படுகிறது. கட்டுரைகள் CC BY 4.0 உரிமத்தில் வெளியாகின்றன.
The authors keep the copyright and grant the journal the right of first publication. Articles are published under CC BY 4.0.
ஆசிரியர் அலுவலகத்தை எப்படித் தொடர்புகொள்வது? How do I contact the editorial office?
editor@tamilmanam.in அல்லது ngmcollegelibrary@gmail.com முகவரிக்கு எழுதுங்கள்; +91 97881 75456 எண்ணில் அழையுங்கள். கட்டுரை பற்றி எழுதும்போது கட்டுரை எண்ணைக் குறிப்பிடுங்கள்.
Email editor@tamilmanam.in or ngmcollegelibrary@gmail.com, or call +91 97881 75456. Quote your Article ID when you write about a manuscript.
உதவி தேவையா? Need help?
- editor@tamilmanam.in
- +91 97881 75456
- திங்கள்–சனி, காலை 9 – மாலை 5 Mon–Sat, 9 am – 5 pm IST