- இதழ் The journal
மதிப்பாய்வு முறை Peer Review Process
ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையும் வெளியீட்டுக்கு முன் இருதரப்பு மறைவு மதிப்பாய்வுக்கு உட்படுகிறது: கட்டுரையாளர் யார் என்பது மதிப்பாய்வாளருக்கும், மதிப்பாய்வாளர் யார் என்பது கட்டுரையாளருக்கும் தெரியாது.
Every research article goes through double-blind peer review before publication: reviewers do not know who the authors are, and authors do not know who reviewed their work.
ஒரு பார்வையில் At a glance
- முறை Review typeஇருதரப்பு மறைவு double-blind
- மதிப்பாய்வாளர் Reviewersகுறைந்தது இருவர் at least two
- முதல் முடிவு First decisionபொதுவாக 1–2 வாரங்களில் usually 1–2 weeks
- ஒப்புமைச் சோதனை Similarity checkஎல்லாக் கட்டுரைகளுக்கும் every manuscript
- நெறி FrameworkCOPE
மதிப்பாய்வின் படிநிலைகள் Steps of the review
முதல் முடிவு பொதுவாக 1–2 வாரங்களில் கிடைக்கும்.
The first decision usually comes within 1–2 weeks.
01தொடக்க ஆய்வு Initial check
பொருள் எல்லை, வடிவமைப்பு, வெளியான ஆய்வுகளோடு உள்ள ஒப்புமை ஆகியவற்றை ஆசிரியர் அலுவலகம் சரிபார்க்கும். எல்லைக்கு அப்பாற்பட்டவையும், ஏற்க இயலாத அளவு ஒப்புமை உள்ளவையும் திருப்பி அனுப்பப்படும். The editorial office checks scope, format and similarity with published work. Manuscripts that are out of scope or overlap unacceptably are returned to the authors.
02மதிப்பாய்வு Review
பொறுப்பாசிரியர், பெயர் நீக்கிய கட்டுரையைத் துறை வல்லுநர்களான குறைந்தது இரண்டு தனித்த மதிப்பாய்வாளர்களுக்கு அனுப்புவார். The handling editor sends the anonymised manuscript to at least two independent reviewers with expertise in the subject.
03முடிவு Decision
ஏற்பு, சிறு திருத்தம், பெரும் திருத்தம், நிராகரிப்பு – இவற்றுள் ஒன்றை ஆசிரியர் முடிவு செய்வார். மதிப்பாய்வாளர் கருத்துகள் பெயரின்றி அனுப்பப்படும். The editor accepts, asks for minor or major revision, or rejects. Reviewers’ comments reach the authors anonymously.
04திருத்தம் Revision
திருத்திய கட்டுரை அதே மதிப்பாய்வாளர்களிடம் மீண்டும் அனுப்பப்படலாம். A revised manuscript may go back to the same reviewers.
05வெளியீடு Production
ஏற்கப்பட்ட கட்டுரை மெய்ப்புத் திருத்தமும் அச்சுக்கோப்பும் செய்யப்பட்டு, பெறப்பட்ட, ஏற்கப்பட்ட, வெளியான நாள்களுடன் இணையத்தில் வெளியாகும். Accepted articles are copy-edited, typeset and published online with their received, accepted and published dates.
ஆசிரியர் முடிவுகள் Editorial decisions
ஏற்பு Accept
மேலும் மாற்றமின்றி வெளியீட்டுக்கு ஏற்கப்படுகிறது. Accepted for publication without further changes.
சிறு திருத்தம் Minor revision
சில சிறிய மாற்றங்களுக்குப் பின் ஏற்கப்படலாம். Small changes are needed before the paper can be accepted.
பெரும் திருத்தம் Major revision
கணிசமான மாற்றங்கள் தேவை; திருத்திய கட்டுரை மீண்டும் மதிப்பாய்வுக்குச் செல்லலாம். Substantial changes are needed; the revised paper may be reviewed again.
நிராகரிப்பு Reject
இவ்விதழில் வெளியிட ஏற்றதல்ல; மதிப்பாய்வுக் கருத்துகள் கட்டுரையாளருக்கு அனுப்பப்படும். Not suitable for the journal; the reviewers’ comments are shared with the authors.
மதிப்பாய்வாளர்கள் மதிப்பிடுவது What reviewers assess
- தமிழாய்வுக்கு அசல் பங்களிப்பு Originality and contribution to Tamil studies
- முறையியல், மூலங்கள், வாதம் ஆகியவற்றின் செம்மை Soundness of method, sources and argument
- முந்தைய ஆய்வுகளுடனான தொடர்பு Engagement with existing scholarship
- மொழி, அமைப்பு ஆகியவற்றின் தெளிவு Clarity of language and structure
- மேற்கோள்கள், துணைநூல்கள் ஆகியவற்றின் துல்லியம் Accuracy of citations and references
முரண்படும் நலன்கள் Conflicts of interest
மதிப்பாய்வாளர்களும் ஆசிரியர்களும் தங்கள் முரண்படும் நலன்களைத் தெரிவித்து, நடுநிலையாக மதிப்பிட இயலாதபோது விலகிக்கொள்ள வேண்டும்.
Reviewers and editors declare any conflict of interest and step aside when they cannot judge impartially.
ஆசிரியர்களோ குழு உறுப்பினர்களோ சமர்ப்பிக்கும் கட்டுரைகளை வேறோர் ஆசிரியர் கையாள்வார்; அக்கட்டுரையின் மதிப்பாய்வைக் கட்டுரையாளர் அணுக இயலாது.
Manuscripts from editors or board members are handled by another editor, and the author has no access to their review.