நோக்கமும் எல்லையும்Aims and Scope

செவ்வியல் காலம் முதல் இன்று வரையிலான தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய, மூலங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை தமிழ்மணம் வெளியிடுகிறது.

Tamilmanam publishes source-based research on the Tamil language, its literature and its culture, from the classical period to the present.

நோக்கங்கள்Aims

ஆய்வு அசலானதாகவும், மூலங்களை முறையாகப் பயன்படுத்துவதாகவும், தமிழியலுக்குத் தொடர்புடையதாகவும் இருந்தால், எத்துறை ஆய்வாளரின் தரமான படைப்பையும் தமிழ்மணம் வரவேற்கிறது.

  • தமிழியல் ஆய்வுகளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மதிப்பாய்வுடன் கூடிய திறந்த அணுகல் களம் அமைத்தல்.
  • தமிழ் நூல்கள், மொழி, பண்பாடு பற்றிய, மூலங்களை அடிப்படையாகக் கொண்ட நுட்பமான ஆய்வுகளை ஊக்குவித்தல்.
  • தமிழ் ஆய்வுகளை உலக வாசகர்களிடமும், உலக ஆய்வுகளைத் தமிழ் வாசகர்களிடமும் கொண்டு சேர்த்தல்.
  • இளம் ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் தங்கள் ஆய்வுகளை ஏற்கப்பட்ட தரத்தில் வெளியிட உதவுதல்.

Tamilmanam welcomes rigorous work from researchers in any discipline, as long as it is original, based on sound use of sources and relevant to Tamil studies.

  • To provide a peer-reviewed, open-access forum for research in Tamil studies, in Tamil and in English.
  • To encourage careful, source-based scholarship on Tamil texts, language and culture.
  • To bring Tamil scholarship to international readers, and international scholarship to Tamil readers.
  • To help young researchers and teachers publish their work to recognised standards.

கட்டுரை வகைகள்Article types

ஆய்வுப் புலங்கள்Scope

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாட்டுடன் தொடர்புடைய மனிதவியல், சமூக அறிவியல் ஆய்வுகளும் வரவேற்கப்படுகின்றன.

Allied work in the humanities and social sciences is welcome when it concerns Tamil language, literature or culture.

செவ்விலக்கியம்Classical Tamil literature

சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், பக்தி, சித்தர் இலக்கியங்கள், அவற்றின் உரைகள்.Sangam poetry, the eighteen minor works (Patiṉeṇkīḻkkaṇakku), the epics, Bhakti and Siddhar literature, and their commentaries.

இக்கால இலக்கியம்Modern Tamil literature

புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், தலித் இலக்கியம், பெண்ணிய எழுத்துகள், புலம்பெயர் தமிழ் இலக்கியம்.Modern poetry, the novel and short story, drama, Dalit and women’s writing, and the literature of the Tamil diaspora.

இலக்கணமும் மொழியியலும்Grammar and linguistics

தொல்காப்பியம், நன்னூல் முதலிய மரபிலக்கணம், விளக்க, வரலாற்று மொழியியல், வட்டார வழக்குகள், சமூக மொழியியல், அகராதியியல்.Traditional grammar from Tolkāppiyam and Naṉṉūl, descriptive and historical linguistics, dialects, sociolinguistics and lexicography.

திறனாய்வும் ஒப்பிலக்கியமும்Criticism and comparative literature

இலக்கியக் கோட்பாடு, திறனாய்வு, அழகியல், தமிழையும் பிற இந்திய, உலக இலக்கியங்களையும் ஒப்பிடும் ஆய்வுகள்.Literary theory and criticism, aesthetics, and comparative studies of Tamil with other Indian and world literatures.

வரலாறு, கல்வெட்டியல், பண்பாடுHistory, epigraphy and culture

தமிழக வரலாறு, கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், கோயில்களும் திருத்தலங்களும், சமயமும் மெய்யியலும், சமூக, பண்பாட்டு வரலாறு.Tamil history, inscriptions, manuscripts, temples and pilgrimage, religion and philosophy, and social and cultural history.

நாட்டுப்புறவியலும் நிகழ்கலைகளும்Folklore and performing arts

நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மொழிக் கதைகள், விழாக்களும் சடங்குகளும், கூத்து, இசை, நடனம், கைவினைகள்.Folk songs and oral narratives, festivals and rituals, folk theatre, music, dance and crafts.

மொழிபெயர்ப்பியல்Translation studies

தமிழுக்கும் தமிழிலிருந்தும் செய்யப்படும் மொழிபெயர்ப்பு: வரலாறு, கோட்பாடு, நடைமுறை, மொழிபெயர்ப்புகளின் வரவேற்பு.Translation into and out of Tamil: history, theory, practice, and the reception of translated works.

தமிழ்க் கல்வியும் கணினித் தமிழும்Tamil education and computing

தமிழ் கற்பித்தலும் கற்றலும், கணினித் தமிழ், எண்ணிம மனிதவியல், தமிழுக்கான இயற்கை மொழிச் செயலாக்கமும் செயற்கை நுண்ணறிவும்.Teaching and learning Tamil, Tamil computing, digital humanities, natural language processing and artificial intelligence for Tamil.

எல்லைக்கு அப்பாற்பட்டவைOutside our scope

கவிதை, கதை, நாடகம் போன்ற படைப்பிலக்கியங்களை – அவை ஆய்வுப் பொருளாக இருந்தாலன்றி – நாங்கள் வெளியிடுவதில்லை. மூலங்களோ மேற்கோள்களோ இல்லாத கட்டுரைகள், விளம்பர நோக்குடைய படைப்புகள், கருத்தரங்க மலர் உட்பட வேறிடங்களில் முழுமையாக ஏற்கெனவே வெளியானவை ஆகியவையும் ஏற்கப்படா.

We do not publish creative writing – poems, stories or plays – except as the subject of analysis; essays without sources or references; promotional material; or work already published in full elsewhere, including in seminar proceedings.

இதழின் வாசகர்கள்Who reads the journal

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகெங்கும் புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்; இந்திய மொழிகள், இலக்கியங்கள், பண்பாடுகள் பற்றிய அறிஞர்கள்; மொழிபெயர்ப்பாளர்கள், நூலகர்கள், தமிழில் ஆர்வமுள்ள பொது வாசகர்கள்.

Teachers, researchers and students of Tamil in universities and colleges in India, Sri Lanka, Malaysia, Singapore and across the Tamil diaspora; scholars of Indian languages, literatures and cultures; translators, librarians and general readers interested in Tamil.

உங்கள் ஆய்வு எங்கள் எல்லைக்குள் வருகிறதா?Does your work fit our scope?

ஐயம் இருந்தால், சமர்ப்பிக்கும் முன் இதழாசிரியர்களுக்கு ஒரு சிறு சுருக்கத்தை அனுப்புங்கள்.

If you are unsure, send the editors a short summary before you submit.

Scroll to Top