- Section
- Articles
- Published
- Pages
- 101-107
Abstract
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை இயல்பான மொழிநடையிலும் நுண்ணிய சமூகப் பார்வையிலும் பதிவு செய்தவர் கி. ராஜநாராயணன் (கி.ரா.). அவருடைய ‘கதவு’ சிறுகதை, ஒரு பழைய வீட்டின் கதவை மையப்படுத்தி அமைகிறது. வறுமை, குடும்ப உறவு, குழந்தைகளின் விளையாட்டு, உழைப்பு, கிராமிய சமூக உறவுகள், வரிவசூல், பசி, இயற்கைச் சூழல், பொருளாதார நெருக்கடி, பொருள்களின் நினைவியல் மதிப்பு, உணவுப் பழக்கம், குழந்தைகளின் பொறுப்புணர்வு, கிராம நிர்வாக அமைப்பு, வரிவிதிப்பு, தாய்மை உணர்வு போன்ற பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைப் இக்கதை பதிவு செய்கிறது. இச்சிறுகதையில் ‘கதவு’ என்பது வெறும் வீட்டின் ஒரு பொருளாக அமையவில்லை. அது குழந்தைகளின் விளையாட்டுக் களமாகவும், குடும்பத்தின் அடையாளமாகவும், பாதுகாப்பின் குறியீடாகவும், இறுதியில் வறுமையின் கொடுமையை உணர்த்தும் பண்பாட்டுச் சின்னமாகவும் உருவெடுக்கிறது. கதவு சிறுகதையில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் உரையாடல்களின் அடிப்படையில் அதன் பண்பாட்டுப் பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Keywords: கி.ரா, கதவு, கரிசல் பண்பாடு, நாட்டுப்புற வாழ்வியல், குழந்தைகள், பொறுப்புணர்வு, வறுமை, உழைப்பு, கிராமிய பண்பாடு, விளையாட்டு, கிராம நிர்வாக அமைப்பு, உணவுப் பழக்கம், இயற்கைச் சூழல், பொருளாதார வசதி, பாதுகாப்பின் குறியீடு, தாய்மை
References
- வே.எவரெஸ்ட் மேரி, “கி.ராஜநாராயணனின் கதவு தந்த கனவு” புதிய அவையம், தொகுதி -7, வெளியீடு -2, சூன்.2023
- வீ.ப.ஜெயசீலன் (தொ.ஆ), கி.ரா.வின் முத்து கதைகள் பத்து, கரிசல் இலக்கியக் கழகம் வெளியீடு, செப்.2024
