கொங்கு வேளாளரின் திருமணச் சடங்கு மரபுகளும் வாழ்வியல் பண்பாடும்: ஓர் சமூக மானிடவியல் ஆய்வு
இல்லறக் கோட்பாடும் தொல்காப்பிய வாழ்வியல் மரபும் கொங்கு மண்டலத்தின் முதன்மை வேளாண் சமூகமான கொங்கு வேளாளரின் வாழ்வியல் கட்டமைப்பு, பண்டைய தமிழ்ச் சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் இல்லற நெறிகளைத் தழுவி அமைந்த ஒன்றாகும். இல்லறமே நற்பண்புகளின் முதன்மையான உறைவிடம் என்றும், அன்பினாலும் அருளினாலும் சுற்றத்தாரையும் விருந்தினரையும் பேணும் விருந்தோம்பலே அறவாழ்வின் அடிப்படை என்றும் இச்சமூகம் கருதுகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பெரும் பேறுகளும் அன்போடு புணர்ந்த இல்லற வாழ்வின் மூலமே முழுமை அடைகின்றன என்பது இவர்களின்…
Details

