கட்டுரைகள் வரவேற்புCall for Papers
தமிழ்மணம் மாதந்தோறும் வெளிவருகிறது; ஆண்டு முழுவதும் கட்டுரைகளை ஏற்கிறது. சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை.
Tamilmanam is published monthly and accepts submissions all year. There is no submission fee.
வரவேற்கிறோம்We invite
தமிழ் மொழி, இலக்கணம், மொழியியல்; செவ்வியல், இக்கால இலக்கியங்கள்; இலக்கியத் திறனாய்வு, ஒப்பிலக்கியம்; தமிழர் பண்பாடு, வரலாறு, நாட்டுப்புறவியல், கலைகள்; மொழிபெயர்ப்பியல்; தமிழ்க் கல்வி, கணினித் தமிழ் ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், மீளாய்வுக் கட்டுரைகள், சுருக்க ஆய்வுக் குறிப்புகள், பாட ஆய்வுகள், நூல் மதிப்புரைகள் – தமிழிலோ ஆங்கிலத்திலோ.
ஏற்கப்பட்ட கட்டுரைகள் அடுத்து வரும் இதழில் வெளியாகும். ஒவ்வொரு கட்டுரைக்கும் Crossref DOI வழங்கப்பட்டு, CC BY 4.0 உரிமத்தில் திறந்த அணுகலில் வெளியிடப்படும்.
Research articles, review articles, short communications, textual studies and book reviews on Tamil language, grammar and linguistics; classical and modern Tamil literature; literary criticism and comparative literature; Tamil culture, history, folklore and arts; translation studies; and Tamil education and computing – in Tamil or English.
Accepted papers are published in the next available issue. Each article receives a Crossref DOI and is published open access under CC BY 4.0.
பங்கேற்கும் முறைHow to take part
- கட்டுரையாளர் வழிகாட்டி, நோக்கமும் எல்லையும் ஆகியவற்றைப் படியுங்கள்.
- தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படி வேர்டு (.docx) கோப்பில் கட்டுரையைத் தயாரியுங்கள்.
- இணையப் படிவம் வழியாகச் சமர்ப்பித்து, கட்டுரை எண்ணைப் பாதுகாத்து வையுங்கள்.
- Read the author guidelines and the aims and scope.
- Prepare the manuscript in Word (.docx), with the title, abstract and keywords in Tamil and English.
- Submit through the online form and keep your article ID.
சிறப்பிதழ்கள்Special issues
துறைகளும் ஆய்வு மையங்களும் கருத்தரங்க அமைப்பாளர்களும் தமிழியல் சார்ந்த ஒரு கருப்பொருளில் சிறப்பிதழை முன்மொழியலாம். சிறப்பிதழ்க் கட்டுரைகளும் வழக்கமான கட்டுரைகளைப் போலவே இரட்டை மறைவு மதிப்பாய்வுக்கு உட்படும்; சிறப்பு இதழாசிரியர்கள் தங்கள் சொந்தக் கட்டுரைகள் பற்றி முடிவெடுப்பதில்லை. கருப்பொருள், சிறப்பு இதழாசிரியர்கள், கால அட்டவணை ஆகியவற்றுடன் editor@tamilmanam.in முகவரிக்கு எழுதுங்கள்.
Departments, research centres and conference organisers may propose a special issue on a theme in Tamil studies. Papers in a special issue go through the same double-blind peer review as regular papers, and the guest editors do not decide on their own papers. Write to editor@tamilmanam.in with the theme, the guest editors and a timeline.
முக்கியத் தகவல்கள்Key facts
- வெளியீட்டுக் காலம்: மாதந்தோறும்Frequency: Monthly
- சமர்ப்பிப்பு: ஆண்டு முழுவதும்Submissions: open all year
- மொழிகள்: தமிழ், ஆங்கிலம்Languages: Tamil and English
- மதிப்பாய்வு: இரட்டை மறைவுPeer review: Double-blind
- கட்டணம்: சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; ஏற்கப்பட்ட பின் ₹1,000Fees: no submission fee; APC ₹1,000 after acceptance
- உரிமம்: CC BY 4.0Licence: CC BY 4.0
