தமிழ் இலக்கியத்தில் பொதிந்துள்ள அறிவியல் ஞானம்: ஒரு காலக்கண்ணாடி
இலக்கியத்தைச் சுவைக்கும்போது, பண்டைய காலத்தில் நம் முன்னோர்களின் அறிவியல் அபரிதமாய் வளர்ச்சி கண்டிருந்ததை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்கள் வெறும் கற்பனைப் புனைவுகளோ அல்லது அழகியல் வெளிப்பாடுகளோ மட்டுமல்ல; அவை ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு, மற்றும் விஞ்ஞான அறிவு ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் கலைக்களஞ்சியங்களாகும். எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாத அக்காலகட்டத்திலேயே, வானியல், புவியியல், மருத்துவக் கலை, பொறியியல் எனப் பல துறைகளிலும் கொண்டிருந்த ஆழமான அறிவை, நம் இலக்கியங்கள் நமக்குச் சித்திரித்துக் காட்டுகின்றன.…