திருக்குறள்: சில சுவையான உண்மைகள்
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள், தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துரைக்கும் ஒப்பற்ற நூல். இந்நூலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்: முதல் அச்சிடல்: திருக்குறள் முதன்முதலில் 1812 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. முந்தைய பெயர்: திருக்குறளின் முந்தைய பெயர் “முப்பால்” ஆகும். இது அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டதால் இப்பெயர் பெற்றது. அதிகாரங்கள்: திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறட்பாக்களைக் கொண்டது.…