சித்தர் பாடல்களில் நாட்டுப்புறக் கூறுகள்
Rural Aspects in Siddhar Songs
DOI:
https://doi.org/10.63300/tm0301082501Keywords:
இசைப்பாடல்கள், கூத்துகள், மொழி, சடங்குகள், நம்பிக்கைகள், நாத்திகம், ஆத்திகம்Abstract
சித்தர் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதியில் கொடுக்கப்பட்ட பொருள் சித்தி பெற்றவர்கள், அருள் பெற்றவர்கள் என்பதாகும். சித்தர் என்னும் சொல்லோடு தொடர்புடைய சித்து என்னும் சொல்லுக்கு மாயவித்தை, இரசவாதிகள் எனத் தமிழ்ப்பேரகராதி பொருள் கொடுத்துள்ளது. இவற்றின் அடிப்படையில் சித்தர் என்னும் சொல் சித்திகள் கைவரப்பெற்றவர்கள் என்றும், முடிவான கொள்கையையும், சமூகப் பற்றும் உடையோர்கள் என்றும் வரையறுக்கலாம். தொல்காப்பியத்தில் வரும் அறிவன், கணியன் ஆகிய பெயர்கள் சித்தர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. நாட்டுப்புற வழக்காறுகளான பழமொழியிலும் தமிழக ஊர்ப்பெயர்களிலும் (சித்தர்க்காடு) சித்தர் என்னும் சொல்வழக்குப் பரவலாகக் காணப்படுகிறது. சித்தர்கள் யோகப் பயிற்சியில் நாட்டமுடையவர்கள். மக்கள் சமய, சமூக வாழ்வில் மரபாய் ஊன்றியிருந்த கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களைத் தம் பாடல்களில் சாடியிருக்கிறார்கள். சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுப்பது மிகவும் சிக்கலானது. உலக வாழ்க்கையினின்று மாறுபட்டுச் சமுதாயத்தில் உள்ள அவலங்களை நாட்டார் வழக்கிலே பாடியுள்ளனர். நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக மூட நம்பிக்கையை சாடிய சித்தர்களின் பன்முகப் பார்வை, மிகவும் பரந்துப்பட்டது. உலக வாழ்க்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மொழி மற்றும் அதன் புரிதல்களைக் கொண்டு, சித்தர்களையும் அவர்தம் கருத்துக்களையும் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்களுக்காக பாடியவர்கள். சித்தர்கள் பாடிய பாடல்களில் காணலாகும் நாட்டுப்புறக் கூறுகளைக் கண்டறிதல் இவ்ஆய்வின் நோக்கமாக அமைகிறது..
Downloads
References
1. அழுகணிச் சித்தர். சித்தர் பாடல்கள். பா.07. சித்தர் நூல்கள், சென்னை நூலகம்.
2. அழுகணிச் சித்தர். சித்தர் பாடல்கள். பா.09. சித்தர் நூல்கள், சென்னை நூலகம்.
3. சிவ வாக்கியார்.பெரிய ஞானக்கோவை. பா.47,சென்னை,1953.
4. சிவ வாக்கியார்.பெரிய ஞானக்கோவை. பா.62,சென்னை,1953.
5. நல்லமுத்து.ரெ. ஆய்வுக்கட்டுரை, புதியக்கோடாங்கிச் சிற்றிதழ்களில் நாட்டுப்புறக்கூறுகள், தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ், பக்.413,2025. DOI:10.5281/zenodo.15552033
6. பாம்பாட்டி சித்தர். அகப்பற்று நீக்கல். பா.1, சித்தர் நூல்கள், சென்னை நூலகம்.
7. பாம்பாட்டி சித்தர். ஆடுபாம்பே. பா.62, சித்தர் நூல்கள், சென்னை நூலகம்.
8. பாம்பாட்டி சித்தர். சரீரத்தின் குணம். பா.60, சித்தர் நூல்கள், சென்னை நூலகம்.
9. பாம்பாட்டி சித்தர். அகப்பற்று நீக்கல். பா.62, சித்தர் நூல்கள், சென்னை நூலகம்.
10. பாரதியார். பாரதி அறுபத்தாறு, பகுதி.7, பாரதி பிரசுராலயம்,பக்.23, 1943
11. . பெருமாள்.ஏ.என். தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 முனைவர் ரெ. நல்லமுத்து (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.