கு.அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்”சிறுகதையில் பண்பாட்டுப் பதிவுகள்
Abstract
தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்கால இலக்கியம் என்ற இலக்கிய வகைப்பாட்டில் சிறுகதை இலக்கியம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதை எழுத்தாளர்களில் எளிய நடையில் அழகு தமிழில் சிறுகதைகளை வார்த்தெடுத்த பெருமைக்குரியவர் கு.அழகிரிசாமி ஆவார். இவரின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை ஏழ்மையிலும் மனிதநேயம், தாய்மை, விருந்தோம்பல், பகிர்ந்துண்ணுதல் போன்ற உயரிய தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் சிறந்த படைப்பாகும். எளிய நடையிலும் ஆழ்ந்த உணர்வுகளுடனும் அமைந்துள்ள இக்கதையில் தாயம்மாள், தன் பிள்ளைகளுடன் பெற்றோரற்ற சிறுவன் ராஜாவையும் அன்போடு அரவணைத்து, உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றை வழங்குகிறாள். குறிப்பாக, பசியால் எச்சில் இலைகளில் சோற்றுப் பருக்கைகளை உண்ணும் சிறுவனின் நிலை வறுமையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. அவனைத் தன் பிள்ளையாகக் கருதி உணவளித்து, தீபாவளியன்று தன் கணவனுக்காக இருந்த புத்துண்டையும் வழங்கும் தாயம்மாளின் செயல், “விருந்தோம்பல்”, “பகுத்துண்டு வாழ்தல்”, “பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுதல்” போன்ற தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்துகிறது. மேலும், தன் செயல்களின் வழியாகவே பிள்ளைகளுக்கு மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தருகிறாள். இவ்வகையில், “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை தாய்மையின் பெருமையையும் விருந்தோம்பலின் சிறப்பையும் எடுத்துரைப்பதோடு, ஏழ்மையிலும் பிறருக்கு உதவும் உயர்ந்த உள்ளம் கொண்ட வாழ்வியல் நெறியைப் பதிவு செய்யும் பண்பாட்டுச் சிறுகதையாகத் திகழ்கிறது.
Keywords:
சிறுகதை, விருந்தோம்பல், பண்பாட்டு விழுமியங்கள், மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம்Downloads
References
அன்பளிப்பு சிறுகதைகள், அழகிரிசாமி கு. சக்தி காரியாலயம், சென்னை, 1952.
ஔவையார் தனிப்பாடல்கள், புலியூர் கேசிகன், மங்கை வெளியீடு, சென்னை, 2010.
தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை, தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், 2008.
பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம், சென்னை, 1977.
திருக்குறள் தெளிவுரை, வரதராசனார், மு. திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 154, டி.டி.கே. சாலை, சென்னை,1969.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.