Abstract
குறவர் இனம் குறித்து முழுமையாக எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. குறவர் யார் ? யார் என்பதற்கு முன், யார் இல்லை என்பதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரிய வாகிரி போலி மொழி பேசிக் கொண்டு, ஊசிமணி, பாசிமணி விற்கும் நரிக்குறவர் என அழைத்துக் கொள்ளும் குருவிக்காரர்கள் வேறு, தொல் தமிழ்க் குறவர் வேறு.
ஒரு காலத்தில் இலங்கை தாண்டி நீண்டிருந்த தென்னிந்திய மலைகளில் ( இந்தியா, இலங்கை இரண்டும் ஒரே நிலமாக இருந்த காலகட்டத்தில் ) மனித இனம் தோன்றிப் பின் சமவெளியில் பரவிய போது குன்றுகளிலேயே தங்கள் வாழ்வைத் தொடர்ந்தவர்கள் பிற்காலத்தில், ‘ குறவர்’ என அழைக்கப் பட்டனர். 'குன்றவர்’ ( குன்றில் வாழ்பவர் ) என்பதன் திரிபு. அவர்கள் வாழ்ந்த மலைப் பகுதி குறிஞ்சி நிலம் எனப் பட்டது.
ஆங்கிலேயர் உட்பட, குறவர் குறித்து எழுதியோர் பெரும்பாலும் இவர்களது மலை வாழ்வை அறிந்திருக்க வில்லை. இவர்களது குடிப் பெயர் குறவர் என்ற போதிலும், தமிழ் இலக்கியங்களிலும், தென்னிந்தியா முழுமையிலும் இவர்களுக்குப் பல அழைப்புப் பெயர்கள் உண்டு. இவர்களது மிகச் சிறந்த மலைவாழ்க்கை குறித்தும், பிற்காலத்தில் அவர்களுக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்தும் சுருக்கமாகக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்..
Views & downloads
- Article views
- Full-text downloads
References
18 references- ( https://ta.wiktionary.org/s/gz6 )
- https://agarathi.com/word/%E 0)
- மகாகவி பாரதியார் - பெல்ஜியம் வாழ்த்துக் கவிதை
- Journal of Indian History -Vol. VII 1928 , Pre-Aryan Tamil culture P.T.Srinivas Ayengar
- Southern India Its History, people and Industrial Resources,Somerset Playne
- Dr, U. R. EHRENFELS, ph. D , Head of the Department of Anthropology, University of Madras,) 1952 KADAR OF COCHIN
- Cochin tribes and castes. volume I 1909., ( Page 11,178 ) -L. K. Anantha krishna iyer
- Sri Lanka's Indigenous Wanniya -laeto: A Case History
- The Veddas, Charles Seligmann , Brenda Seligmann
- Advanced History of India, P.T. Srinivasa Iyengar page 2,3
- Notes on Criminal Classes of the Madras Presidency 1892 . pages 48 and 49 of Chapter VI Frederick S. Mullaly
- Games in Tholkappiyam and Akananooru -- T. Kavitha.
- ஐவகை நிலங்களில் கூத்துகள் அன்றும் இன்றும்.' செ. மகேஸ்வரி
- Dishonoured by history….. Dr Meena Radhakrishna
- Madura country – A Manual, 1868J.H. Nelson ( Chapter III, pages 67, 69 )
- Madura Gazetteer page 93 & 94 ..... 17,18. Salem Gazetteer Page 152 ( Foot Note )
- அகநானூறு,, புற நானூறு,, ஐங்குறுநூறு, திருமுருகாற்றுப் படை, மலைபடு கடாம், மீனாட்சியம்மை குறம். திருக்குற்றாலக் குறவஞ்சி, தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, குறிஞ்சிப் பாட்டு.
- Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century by Iravatham Mahadevan Page 143