சுருக்கம்
தமிழர்களின் வாழ்வியல் என்பது மொழி, உணவு, நம்பிக்கை, பண்பாடு, மரபு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். இவ்வாழ்வியல் கூறுகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன், காலமாற்றத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும் பெற்றுள்ளன. தொ. பரமசிவம் எழுதிய அறியப்படாத தமிழகம் என்னும் நூல், குறிப்பாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியல் கூறுகளை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. இந்நூலை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, தமிழ்மொழியின் மாண்பு, தமிழரின் உணவு முறைகள், உணவு சார்ந்த நம்பிக்கைகள் ஆகியவை இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. தமிழின் தொன்மை மற்றும் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் தமிழின் பெயரைக் கொண்ட ஊர்ப்பெயர்கள், கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்கள் போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும், பண்டைய தமிழரின் உணவுப் பழக்கவழக்கங்கள், நிலவியல் சார்ந்த உணவுப் பொருள்கள், பண்டமாற்று முறை, அயல்நாட்டு வாணிபம் ஆகியவை விளக்கப்படுகின்றன. உணவு சார்ந்த நம்பிக்கைகள் நேரம், கிழமை, பருவகாலம், சடங்குகள், பயணம், விழாக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தமையும் ஆராயப்படுகிறது. காலமாற்றத்திற்கேற்ப தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வாய்வின் வழியாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியலில் மொழியும் உணவும் நம்பிக்கைகளும் முக்கியமான பண்பாட்டு அடையாளங்களாக விளங்கியுள்ளமை வெளிப்படுத்தப்படுகிறது.
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
4 references- தொ.பரமசிவம் – அறியப்படாத தமிழகம்
- தமிழின் சிறப்பு - கி. ஆ. பெ. விசுவநாதன் பாரி நிலையம் ,சென்னை
- தமிழர் உணவு க.நமச்சிவாயம் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை
- பட்டினப்பாலை – நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை