சுருக்கம்

“கல்வி என்பது மனிதனின் உள்ளத்தில் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் கருவி” என்ற கருத்து, கல்வியின் உண்மையான நோக்கத்தை எடுத்துரைக்கிறது. காலம் மாறும்போது மனிதனின் வாழ்க்கை முறையும், அறிவைப் பெறும் முறையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றத்தின் விளைவாகக் கல்வித்துறையிலும் பல்வேறு புதுமைகள் தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கல்வித் தொழில்நுட்பம் விளங்குகிறது. இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் இயக்கப்படுகிறது. கணினி, இணையம், திறன்பேசி, செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் வகுப்பறை, காணொளிப் பாடங்கள், மின்னூல்கள், கல்வி செயலிகள் போன்றவை கல்வியின் இயல்பையே மாற்றியமைத்துள்ளன. ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவு வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வழிகாட்டியாகவும் மாறியுள்ளார். எனவே, கல்வியை எளிமையாகவும், சுவையாகவும், பயனுள்ளதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதில் கல்வித் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, கல்வி முறை, அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி, கணினியின் வருகை, இணையத்தின் வளர்ச்சி, திறன்பேசி மற்றும் செயலிகள், செயற்கை நுண்ணறிவு, கல்வித் தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், கல்வித் தொழில்நுட்பத்தின் கருவிகள், மாணவர்களுக்கு கல்வித் தொழில்நுட்பத்தின் பயன்கள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேற்கோள்கள்

7 references
  1. ஆசியன், சி. (2020). டிஜிட்டல் யுகத்தில் கல்விச் சிந்தனைகள். பாரி நிலையம், சென்னை.
  2. சுப்பையா, இரா. (2017). கற்பித்தல் நுட்பங்களும் ஊடகப் பயன்பாடும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  3. செல்வம், பி. (2022). கல்வித் தொழில்நுட்பமும் கற்பித்தல் முறைகளும். சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.
  4. நாகராஜன், கி. (2018). கல்வித் தொழில்நுட்பவியல். ஸ்ரீராம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
  5. முத்துக்கருப்பன், இரா. (2019). மனிதநேயக் கல்வியும் சமூக வளர்ச்சியும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  6. இவ்வாய்வுக் கட்டுரையின் ஆசிரியர், இக்கட்டுரையின் ஆய்வு, தரவுச் சேகரிப்பு, பகுப்பாய்வு அல்லது பிரசுரம் தொடர்பான எந்தவொரு நிதி சார்ந்த அல்லது தனிப்பட்ட அமைப்புகளுடனும் எந்தவிதமான நலன்சார் முரண்பாடுகளும் (Conflict of Interest) இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.
  7. I, The Author Of This Research Article, Hereby Declare That There Are No Conflicts Of Interest With Any Financial Or Personal Entities Regarding The Research, Data Collection, Analysis, Or Publication Of This Article.

மேற்கோள் காட்டுவது எப்படி

கல்வித் தொழில்நுட்பம். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 126-132. https://doi.org/10.63300/09r78f61

ஒத்த கட்டுரைகள்

175-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.