சுருக்கம்
இலக்கியம் மனிதனின் அனுபவங்களையும், அவனது அறிவுத் தேடல்களையும், எதிர்காலக் கற்பனைகளையும் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்கிறது. இவ்வகையில் பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் குறிப்பிடத்தக்க படைப்பாக அமைகிறது. 1930ஆம் ஆண்டில் வெளிவந்த இக்காவியத்தில் இடம்பெறும் இரண்டு மூலிகைகள், மனிதனின் இயல்பான புலனறிவு எல்லைகளை விரிவுபடுத்தும் கற்பனைக் கருவிகளாகச் செயல்படுகின்றன. ஒரு மூலிகையை உட்கொண்டால் உலகின் பல இடங்களில் மக்கள் பேசுவதைக் கேட்க முடியும். மற்றொரு மூலிகையின் மூலம் தாம் இருக்கும் இடத்திலிருந்தபடியே உலகில் நடைபெறும் நிகழ்வுகளைக் காணமுடியும். இவ்விரண்டு கற்பனைகளும் வெறும் அதிசயக் கூறுகளாக மட்டுமன்றி, தகவலைத் தொலைவில் இருந்து பெறுதல், புலன்களின் எல்லையை விரிவுபடுத்துதல், தகவலைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய கருத்துகளுடன் தொடர்புடையவையாக அமைகின்றன. இதனை முந்தைய ஆய்வுகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற தகவல் ஊடகங்களின் முன்கற்பனையாக வாசித்துள்ளன. ¹ இக்கட்டுரை அந்த வாசிப்பைத் தொடர்ந்தும் விரிவுபடுத்தியும், கேட்கும் மூலிகையை Speech Recognition மற்றும் Natural Language Processing (NLP) போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுடனும், காணும் மூலிகையை Computer Vision போன்ற காட்சி நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடனும் ஒப்பிட்டு ஆராய்கிறது. மேலும், இவ்விரண்டு மூலிகைகளும் இணைந்து செயல்படும் நிலையில் Multimodal செயற்கை நுண்ணறிவு-யுடன் காணப்படும் கருத்தியல் ஒற்றுமைகளும் ஆராயப்படுகின்றன. இவ்வாசிப்பு பாரதிதாசன் செயற்கை நுண்ணறிவை முன்கூட்டியே கணித்தார் என்ற வரலாற்றுச் சான்றை முன்வைப்பது மட்டுமன்றி மாறாக, மனிதப் புலன் விரிவாக்கம் மற்றும் தகவல் அணுகுதல் குறித்த இலக்கியக் கற்பனை எவ்வாறு நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் கருத்தின் வழி பொருந்தி வரும் என்பதையே முன்வைக்கிறது.
மேற்கோள்கள்
8 references- பாரதிதாசன். சஞ்சீவி பர்வதத்தின் சாரல். 1930.
- பாரதிதாசன். பாரதிதாசன் கதைப் பாடல்கள். தமிழ் இணையக் கல்விக்கழகப் பதிப்பு.
- Clark, Andy & Chalmers, David. “The Extended Mind.” Analysis, 58(1), 1998, pp. 7–19. doi: 10.1093/analys/58.1.7.
- Caffagni, Davide et al. “The Revolution of Multimodal Large Language Models: A Survey.” Findings of the Association for Computational Linguistics: ACL 2024, 2024, pp. 13590–13618. doi: 10.18653/v1/2024.findings-acl.807.
- Zhang, J. et al. “MM-LLMs: Recent Advances in MultiModal Large Language Models.” Findings of the Association for Computational Linguistics, 2024, pp. 12401–12430. doi: 10.18653/v1/2024.findings-acl.738.
- Yin, Shukang et al. “A Survey on Multimodal Large Language Models.” National Science Review, 11(12), 2024, nwae403. doi: 10.1093/nsr/nwae403.
- Karvannan, A. “அறிவியக்க நோக்கில் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.” KALANJIYAM – International Journal of Tamil Studies, 6(1), 2026, pp. 162–169. doi: 10.63300/tirjts06012026.19.
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல். தமிழ் விக்கிமூலம் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூல் வளங்கள்.