புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி
(பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)
தேசியத் தர மதிப்பீட்டுக் NAAC (4th Cycle) A++Grade (CGPA 3.75/4)) புள்ளிகள் பெற்றது
செயல் திறன் ஆற்றல் வளத்தனித்தகுதிப் பெற்றது.
திருச்சிராப்பள்ளி 620 002. தமிழ்நாடு, இந்தியா.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, தமிழாய்வுத்துறை
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா
மற்றும்
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி
தமிழ் மணம் சர்வதேச தமிழ்; ஆய்விதழ் ; ISSN:3049-0723
(Online -International Peer Reviewed & Refereed ,Open Access Journal as Per New UGC Rules)
இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பொருண்மை: இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்
அன்புடையீர் வணக்கம்,
திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி பெண்களுக்கென இயங்கி வரும் புகழ்ப்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி. தென்னிந்தியாவில் உள்ள பழமையான கல்லூரிகளில் நூற்றாண்டைக் கடந்து முதன்மைப் பெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று சிறப்புடன் செயலாற்றி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு நான்காம் சுழற்சியில் 3.75/4 தரமதிப்பீட்டைப் பெற்று யூூ என்ற தகுதியை தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினரால் பெற்ற பெருமைக்குரியது.
இத்தகு சிறப்புடைய புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி இணைந்து நடத்தும் “இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தவிருக்கின்றது. இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வுமாணவர்கள் ஆகியோரிடமிருந்து ஆய்வுநெறிகளுடன் கூடிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்தரங்க நோக்கம்
பழந்தமிழ்ச் சமூகம் தங்களது அறிவை உடைமையாகக் கொண்டிருந்திருக்கின்றது. அச்சமூகம் தங்களது தேடல்களை அரசியல், அறிவியல், அறவியல், கலைகள், தொழில்நுட்பம், மேலாண்மை, இயற்கை, எதிர்காலவியல், தொலைநோக்குச் சிந்தனைகள் என்ற நவீனத் தேடல்களோடு நாள்தோறும் எல்லைகளை விரிவுப்படுத்தி, புதிய புதிய ஆய்வுக்களங்களை மேற்கொள்ள வழி வகுத்திருப்பது வியப்பிற்குரியது. அத்தகைய வியப்பினை தமிழ்மொழியின் இலக்கிய வளம், இலக்கண அரண், அறிவு வளம், நிலைத்தன்மையுடைய சமூக விழுமியங்கள் ஆகியவற்றை உணர்த்தும் செவ்வியல் இலக்கியங்களாகிய தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை ஆகியவற்றில் வரலாற்றுப் பின்னணிகளோடு இடம்பெற்றுள்ள இந்தியச் சிந்தனை மரபுகளை எடுத்துரைப்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.
கருத்தரங்கப் பொருண்மை
பழந்தமிழரின் தொலைநோக்குப் பார்வை
சங்க இலக்கியத்தில் மேலாண்மை
சங்க இலக்கியத்தில் தொழில்நுட்பவியல்
பண்டைய மருத்துவ முறைகள்
தொல்காப்பியரின் உயிரியல் அறிவு
தொல்காப்பியத்தில் உளவியல்
இரட்டைக்காப்பியங்களில் சமயநெறிகள்
சிலம்பில் இயற்கை வளமும் உயிரின வளமும்
சங்க தமிழரின் இசையறிவு
சங்க கால அரசு உருவாக்கம்
தமிழரின் அறிவியல் அறிவு
பண்பாட்டு நெறிகள்
சமூக விழுமியங்கள்
கலைகள் – தகவல் ஊடகம்
சமுதாய ஆவணங்கள்
சங்ககால போர்முறைகள்
புறநானூற்றில் தத்துவங்கள்
உலகப் பொதுமறையில் ஒழுகலாறுகள்
அக இலக்கியங்களில் உளவியல் அணுகுமுறைகள்
முத்தொள்ளாயிரத்தில் ஆட்சிமுறை
முத்தொள்ளாயிரத்தில் பொருளாதாரம்
தமிழரின் வானியல் அறிவு
இறையனார் களவியல் உரையின் சொல்வளம்
பதினெண் கீழ்க்கணக்கில் மருந்து
செவ்வியல் இலக்கியங்களில் செயற்கை நுண்ணறிவு
இவ்வாறு செவ்வியல் இலக்கியங்களோடு தொடர்புடைய தலைப்புகளில் கட்டுரைகள் அனுப்பலாம்.
ஆய்வுக் கட்டுரைக்கான விதிமுறைகள்
ஆய்வுக்கட்டுரை 7 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஒருங்குறி (unicode) எழுத்துருவில் 12 புள்ளி அளவில் 1.5 அளவு இடைவெளியில் தட்டச்சு செய்து சொற்கோப்பாக (றுழசன குழசஅயவ) அனுப்ப வேண்டும்.
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் கட்டுரை அனுப்பலாம்.
கருத்தரங்கப் பொருண்மைக்கு ஏற்ற வகையில் கட்டுரை அமைதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையில் கட்டுரையாளரின் பெயர், கல்விசார் முகவரி, அலைபேசிஎண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சரியான முறையில் பிழையின்றி இருத்தல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையில் ஆய்வுச்சுருக்கம், முன்னுரை, உட்தலைப்புகள், சான்றெண் விளக்கம், கலைச்சொற்கள், துணைநூற்பட்டியல் முதலியவை இடம்பெறல் வேண்டும்.
ஆய்வுக்கட்டுரை ஆய்வாளரின் சொந்தமுயற்சியில் அமைந்ததாய் இருத்தல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்படும் நூல்கள், ஆய்விதழ்கள் மற்றும் பிறதரவுகள் போன்றவை துணைநூற்பட்டியலில் சரியான முறையில் அகர வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்துவதற்கும், நீக்குவதற்கும் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு ஐளுளுN எண்ணுடன் ஆய்விதழில் வெளியிடப்படும்.
கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 06.08.2025
ஆய்வுக் கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: lathahcc2006@gmail.com
மலேசிய ஆய்வுக் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mmmannan@gmail.com
கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் – 14.07.2025
கட்டுரையாளர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தியதற்கான ((PROOF) ஆவணத்தைக் கட்டுரையுடன் இணைத்தல் வேண்டும்.