சுருக்கம்
தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கி.ராஜநாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் இடைச்சவள் என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் வாழும் மண்ணையும் அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்வியலையும் பேச்சு மொழியிலேயே அதாவது வட்டார வழக்கினை கொண்டு இலக்கியம் ஆகியவர் அவர இவரது படைப்புகளில் பயின்று வரும் வட்டார வழக்குச் சொற்கள் அவற்றின் அமைப்பில் பண்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக இருக்கின்றது சமூகத்தை தன்னுள் உள்ளடக்கி இருப்பது தான் இலக்கியம் என்று கூறுவோம். அந்த இலக்கியத்தை படைக்கும் படைப்பாளி என்பவன் சமூகத்தின் ஒரு அம்சமாக இருந்து அவனது படைப்புகளை வெளிப்படுத்துவான் என்பதற்கு உதாரணமாக கி.ராஜநாராயணனுடைய படைப்புகள் காணப்படுகின்றது இப்படைப்புகளில் வட்டார மரபுகள் அதன் தாக்கம் எந்த அளவில்i இருக்கின்றது என்பதை கி ராஜநாராயணனின் கோபலபுரத்து மக்கள், பிஞ்சுகள், கிடை, போன்ற நாவல்களில் வெளிப்படும் மக்களின் பழக்கவழக்கங்கள் பொருளாதார நிலைகள் விவசாயம் மண்ணின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட வட்டார வழக்குச் சொற்கள் வட்டார வழக்கு சொற்களிடையே கதை மாந்தர்களின் களப்பின்னனினையும் உயிரோட்டமும் உள்ள படைப்பு எவ்வாறு மக்களின் வாழ்வியல் தரத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது என்பதை மைய கருவாகக் கொண்டு கி.ராஜநாராயணன் படைப்புகளில் உள்ள வட்டார வழக்குகளை ஆராய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும்.
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
6 references- ராஜநாராயணன் கி. கோபாலபுரத்து மக்கள் அன்னம் வெளியீடு, சிவகங்கை.
- ராஜநாராயணன். கி. கிடை ஐந்திணை பதிப்பகம் சென்னை.
- ராஜநாராயணன் கி. பிஞ்சுகள் மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
- ராஜநாராயணன் கி. வட்டார வழக்குச் சொல் அகராதி கரிசல் வட்டாரம் அகரம் வெளியீடு, சிவகங்கை.
- சிவசுப்பிரமணியன்.ஆ. கரிசல் மண்ணும் மனிதர்களும் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- பஞ்சாங்கம்.க.கரிசல் இலக்கியமும் கி ராஜநாராயணனும் வல்லினம் பதிப்பகம்,புதுச்சேரி.