சுருக்கம்

பிச்சிப் பூ நாவல் குமரி மாவட்ட நாடார்கள் பற்றிய ஒரு சமூக ஆவணமாக விளங்குகிறது. சிறப்பாக குமரி மாவட்ட நாடார்கள் ஆதிக்க, அதிகார வர்க்கத்தினரால் எதிர்கொண்ட பண்பாட்டு ஒடுக்கு முறையையும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு அடையாளப் போராட்டங்களையும் இக்கட்டுரை கவனத்தில் கொள்கிறது. தமிழகத்திலே சாதிய ஒடுக்கு முறைக்கானச் சிந்தனைகள் பார்ப்பணிய மேலாண்மைக்குப் பிறகே தொடங்குகிறது. பார்ப்பணிய மேலாண்மைக்குப் பிறகு ஆதிக்க சாதியினர் அடித்தள மக்களை ஒடுக்குவோராக விளங்கினாலும் அந்த ஒடுக்குமுறை காவல்துறை, இராணுவம் போன்ற அரசின் அடக்குமுறை இயந்திரங்கள் வருவாய்த்துறை, நீதித்துறை போன்ற நிர்வாக அமைப்புகள் மூலமாக மட்டுமே நிகழவில்லை. பண்பாட்டு ஒடுக்குமுறை வாயிலாகவும் ஆதிக்க சாதியினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களிடம் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டியுள்ளனர் என்பதை நாவலின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. பண்பாட்டு ஒடுக்கு முறையானது குமரி மாவட்ட நாடார்களிடம் ஆதிக்க சாதியினரால் பொதுக் குளத்தில் நீர் எடுக்கத் தடை, செருப்பு அணிய அனுமதி மறுத்தல், ஆளுவோரின் பாலியல் வன்முறை, கல்வி கற்கத் தடை, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு போன்ற நிலைகளில் வெளிப்பட்டதைக் கட்டுரை முன்வைக்கிறது .அதோடு அதற்கு எதிராக நாடார் சாதியினர் மேற்கொண்ட பண்பாட்டு அடையாளப் போராட்டங்களையும் இக்கட்டுரை பதிவு செய்கிறது .

Views & downloads

050100150அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 113 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 4 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1134
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

5 references
  1. சிவசுப்ரமணியன்., 2002: அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை-002.
  2. மேலது., 2014: இனவரைவியலும் தமிழ் நாவலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 098.
  3. பக்தவத்சல பாரதி., 2014: இலக்கிய மானிடவியல், அடையாளம் பதிப்பகம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி - 621310.
  4. பொன்னீலன்.,2019: பிச்சிப் பூ (நாவல்)
  5. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 098.

மேற்கோள் காட்டுவது எப்படி

குமரி மாவட்ட நாடார்களும் பண்பாட்டு ஒடுக்குமுறையும் (பொன்னீலனின் பிச்சிப் பூ நாவலை முன்வைத்து). (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 153-160. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/786

ஒத்த கட்டுரைகள்

585-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.