எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளா?Questions about our policies?
ஆசிரியர் அலுவலகத்துக்கு editor@tamilmanam.in என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
Write to the editorial office at editor@tamilmanam.in.
Call: 9788175456
இதழ் நெறிமுறை · தமிழ்மணம்Journal policy · Tamilmanam
தமிழ்மணம் இதழுக்கு வரும் ஒவ்வொரு கட்டுரையும் மதிப்பாய்வுக்கு முன் ஒப்புமைச் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
Every manuscript submitted to Tamilmanam is screened for similarity before peer review.
ஒவ்வொரு சமர்ப்பிப்பும் இதழாசிரியர் முன்னாய்வின்போது, மதிப்பாய்வுக்கு அனுப்பும் முன், Plagiarism Checker X மூலம் சோதிக்கப்படும்; கணிசமாக மாற்றப்பட்டிருந்தால் வெளியீட்டுக்கு முன் மீண்டும் சோதிக்கப்படும்.
வழிகாட்டலாக, மேற்கோள் பட்டியல், முறையாக மேற்கோள் காட்டிய உரை, வழக்கமான ஆய்வுமுறை விவரிப்புகள் தவிர்த்து, மொத்த ஒப்புமைச் சுட்டெண் 15%-க்கு மேல் உள்ள அல்லது ஏதேனும் ஒரு மூலத்துடன் கணிசமாக ஒத்திருக்கும் கட்டுரைகள் ஆசிரியர்களுக்குத் திருப்பி அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும். சுட்டெண் ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே: இதழாசிரியர்கள் அறிக்கையைப் படித்து ஒவ்வொரு ஒப்புமையையும் மதிப்பிடுவர்.
ஒப்புமை கண்டறியும் மென்பொருள்கள் ஆங்கிலத்தை ஒப்பிடத் தமிழ் உரையைக் குறைந்த துல்லியத்துடனேயே ஒப்பிடுகின்றன; எனவே ஐயத்துக்குரிய பகுதிகளை இதழாசிரியர்கள் அச்சு, இணைய மூலங்களுடன் நேரடியாகவும் ஒப்பிட்டுப் பார்ப்பர்.
Every submission is checked with Plagiarism Checker X during editorial screening, before it is sent for peer review, and again before publication if it has changed substantially.
As a guide, manuscripts with an overall similarity index above 15% (excluding the reference list, properly quoted text and standard method descriptions), or with substantial overlap with any single source, are returned to the authors or rejected. The score is only a starting point: editors read the report and judge every match.
Similarity software matches Tamil text less reliably than English, so editors also compare doubtful passages with printed and online sources by hand.
சங்கப் பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்திப் பாடல்கள், அவற்றின் உரைகள் போன்ற செவ்வியல் நூல்களிலிருந்து, பதிப்பையும் பாடல் அல்லது நூற்பா எண்ணையும் சுட்டித் தெளிவாக மேற்கோள் காட்டுவது வரவேற்கப்படுகிறது. வெளியான உரையையோ ஒரு பாடலுக்குப் பிற அறிஞர் தந்த விளக்கத்தையோ தம் சொந்த விளக்கமாகக் காட்டுவது கருத்துத் திருட்டு ஆகும்.
Quotations from classical texts – Sangam poems, Tolkāppiyam, Thirukkural, Silappatikāram, devotional hymns and their commentaries (urai) – are welcome when clearly quoted and cited with the edition and the verse or sūtra number. Presenting a published commentary, or another scholar’s reading of a verse, as your own interpretation is plagiarism.
வெளியீட்டுக்கு முன்: அளவைப் பொறுத்து, கட்டுரை திருத்தத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும்; காரணம் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படும். வெளியீட்டுக்குப் பின்: இதழ் COPE வழிமுறை வரைபடங்களைப் பின்பற்றும்; திருத்தம் அல்லது திரும்பப் பெறுதல் விளைவாகலாம் (காண்க: திருத்தமும் திரும்பப் பெறுதலும்); ஆசிரியர்களின் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்படலாம்.
Before publication: depending on the extent, the manuscript is returned for revision or rejected, and the authors are told why. After publication: the journal follows the COPE flowcharts; the outcome may be a correction or a retraction (see Corrections and retractions), and the authors’ institution may be informed.
இறுதியாக மறுஆய்வு: அக்டோபர் 2026Last reviewed: October 2026
ஆசிரியர் அலுவலகத்துக்கு editor@tamilmanam.in என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
Write to the editorial office at editor@tamilmanam.in.