கு.அழகிரிசாமியின் சிரிக்கவில்லை-மௌனப் பார்வை

Authors

  • விஜயலெட்சுமி ஆ உதவிப்பேராசிரியர்&துறைத்தலைவர்,தமிழ்த்துறை,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டப்பிடாரம் India Author

Abstract

‘சிரிக்கவில்லை’ சிறுகதை மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படும் உளவியல் உணர்வுகள், சமூகச் சூழல், உறவுகளின் தன்மை, மனப்போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆராயத்தக்கதாக அமைகிறது. இக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் உரையாடல்,உரையாடலின்மைகளின் வழியாக அவர்களின் வெளிப்படையான நடத்தைக்கும் உள்ளார்ந்த மனநிலைக்கும் இடையிலான வேறுபாடு வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல; சில நேரங்களில் மனவேதனை, ஏமாற்றம், இயலாமை, சமூக அழுத்தம் ஆகியவற்றை மறைக்கும் வெளிப்புறத் தோற்றமாகவும் அமைகிறது . ‘சிரிக்கவில்லை’ சிறுகதையின் கதை அமைப்பு, கதாபாத்திரப் படைப்பு, உளவியல் கூறுகள், சமூகப் பார்வை, உரையாடல் உத்தி மற்றும் தலைப்புப் பொருத்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. கதாபாத்திரங்களின் மனவுணர்வுகள் எவ்வாறு நிகழ்வுகளின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன என்பதும் ஆராயப்படுகிறது. இச்சிறுகதை தனிமனித உளவியலையும் சமூக உறவுகளையும் இணைத்துப் பதிவு செய்யும் படைப்பாக இவ்வாய்வில் அணுகப்படுகிறது.

Keywords:

உணர்வு வெளிப்பாடு, சிரிப்பின்மை, மௌனப் பார்வை, உளவியல், உடல்மொழி

Downloads

Download data is not yet available.

References

அழகிரிசாமி, கு. சிரிக்கவில்லை : கதைகள். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம், முதற்பதிப்பு, 1952.

தா. ஏ. ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ஜெய்தினைப் பதிப்பகம், சென்னை, 2012.

தி. ச. நடராசன், திறனாய்வுக்கலை, NCBH, சென்னை, 2012.

க. பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, அகம், தஞ்சாவூர், 2004.

க. கைலாசபதி, திறனாய்வுப் பிரச்சனைகள், சென்னை புத்தக ஹவுஸ், சென்னை, 1980

குவிகம் மின்னிதழ்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். சிரிக்கவில்லை : கதைகள் / கு. அழகிரிசாமி.

Sigmund Freud, The Interpretation of Dreams – Psych Web

Downloads

Published

10/01/2026

How to Cite

கு.அழகிரிசாமியின் சிரிக்கவில்லை-மௌனப் பார்வை. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 63-66. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/727

Similar Articles

1-10 of 527

You may also start an advanced similarity search for this article.