Abstract
இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி மக்களின் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசுவதாக புதினம், சிறுகதை, கவிதை, ஹைக்கூ, திரைப்படம் போன்றவை நவீன இலக்கியங்களாக அமைகின்றன. பொதுவாக சமுதாயத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிப்பனாக இவ்வுலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகமான நிலப்பரப்புகள் கரிசல் மண் பகுதியே , கரிசல் வட்டாரங்களின் முதன்மை தொழில் விவசாயம் . இப்பகுதிகளில் நில உடமை சமுதாயம் உயர் சாதியினர் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு உறுதுணையாக தங்கள் வாழ்க்கையை அற்பணித்தவர்கள் கீழ் சாதி விளிம்பு நிலை மக்களவர். பா. செயப்பிரகாசம் அவர்களின் தாலியில் பூச்சூடியவர்கள் சிறுகதையில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் என்னும் தலைப்பில், அதிகார வர்க்கம், கீழ் சாதி மக்களின் உழைப்பை சுரண்டுதல், ஜாதியை பாகுபாடு, தீண்டாமை, பொருளாதார நிலை, பெண் அடிமை , உணர்வு, உரிமை, சுயமரியாதை, எதிர்ப்புணர்வு, மக்களின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்வதை இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Views & downloads
- Article views
- Full-text downloads