Abstract

தொ. மு.சிதம்பர ரகுநாதன் தமிழின் முன்னோடி எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை நாவல் கவிதை நாடகம் என பல படைப்புகளை படைத்துள்ளார். திருச்சிற்றம்பல கவிராயர் என்ற புனைப் பெயரிலும் கவிதை எழுதியுள்ளார். இவரது பஞ்சும் பசியும் என்ற நாவல் நெசவாளர்களின் துயர வாழ்வை பேசும் நாவலாகும். இது செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது அயல் மொழியில் அதிக அளவு விற்பனையான முதல் தமிழ் நாவல் இந்நாவல் ஆகும் இவர் எழுதிய பாரதி காலமும் கருத்தும் என்ற நூல் முற்போக்கு சிந்தனையும் சமூகப் புரட்சியும் சாதிய கட்டமைப்பும் வர்க்கப் போராட்டத்தையும் கொண்ட நூலாகும். இந்நூலில் பாரதியை ஒரு ஆன்மீக கவிஞராகவோ தேசபக்த கவிஞராகவோ பார்த்த பார்வையில் இருந்து மாறுபட்டு பாரதி வர் க்க முரண்பாடுகளை சமூக ஒடுக்கு முறைகளையும் அறுத்தெறிய வந்த புரட்சியாளர் என்பதை என் நூலில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சாதிய கட்டமைப்பிற்கு எதிரான வர்க்க புரட்சி நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு சமூகப் புரட்சி சமூக அமைப்போடு கூடிய பெண் விடுதலை, அதாவது பெண் விடுதலையின் சமூக பரிமாணம், உலகளாவிய மனித நேயம், ஒடுக்கப்பட்டோர் மீதான வர்க்கப் புரட்சி, மதசார்பற்ற ஆன்மீகம், பாரதியின் சோசலிச பார்வை பொருளாதார ஏற்றத்தாழ்வு அற்ற வர்க்க உணர்வு உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சி தொழில் மற்றும் கூட்டுடைமைக் கொள்கை இவை போன்ற பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை பாரதி காலமும் கருத்தும் என்ற நூல் முன் வைத்துள்ளதை இவ்வாய்வு ஆராய்ந்துள்ளது.

Views & downloads

01Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 1 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 0 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep10
  • Article views
  • Full-text downloads

How to Cite

தொ. மு. சி. ரகுநாதனின் “பாரதி காலமும் கருத்தும்” நூலில் இடம்பெற்றுள்ள முற்போக்கு சிந்தனைகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 53-58. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/851

Similar Articles

51-60 of 595

You may also start an advanced similarity search for this article.