சுருக்கம்
அச்சத்தின் காரணமாக தோன்றியவையே தெய்வ வழிபாடாகும். அன்றிலிருந்து இன்றுவரை ‘நம்பிக்கை’ என்ற ஒற்றை சொல்லில் அனைவரின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது என்றால் மிகையாகாது. அதற்கு முதலும் முடிவுமாக இருப்பவர் ‘கடவுள்’. உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகம் தோன்றி வளர்வதற்கு முன்பே, பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம் நம் தமிழினம் என்று வரலாறுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. இவர்களின் வாழ்க்கையில் ஒன்றியிருக்கும் இறை வழிபாடே தமிழர்களின் தலையாய வழிபாடாகும். இயற்கையை வழிபட்டு வணங்கிய மனிதன், நாளடைவில் தம் முன்னோர்களையும் வழிபடத் தொடங்கினான். தம் குடும்பத்தில் அகால மரணமடைந்தவர்களால் தமக்கு ஏதேனும் இடையூறு வந்துவிடுமோ? என்று அஞ்சியவன் இறந்தவர்களையும் வழிபடலானான். இவ்வாறு, ஒவ்வொரு குடும்பமும் தனித்தனித் தெய்வங்களை வழிபட்ட மரபே சிறுதெய்வ வழிபாடாக முகிழ்த்தது. மக்கள், தம் வாழ்நிலைக்கு ஏற்ப இத்தெய்வத்திற்குத் திருவிழாக்களையும் வழிபாடுகளையும் செய்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்ட நகராட்சிகளில் ஒன்றான இராசிபுர வட்ட சிறுதெய்வங்களின் அமைவிடங்களையும் வழிபாட்டையும் பற்றி ஆராய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
7 references- ஸ்ரீ சந்திரன்.ஜெ., சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 1999.
- அருள்தாசு., தமிழர் பண்பாட்டில் வாழிபாடு, வி.பி.ஞானப்பிரகாசம், சூ.இன்னாசி பதிப்பகம்.
- நாட்டுப்புறவியல், காவியா பதிப்பகம், முதல் குறுக்குத்தெரு, பிரஸப்புரம், கோடம்பாக்கம், சென்னை – 24.
- தகவலாளர் பட்டியல்
- முத்துசாமி.அ., நாமக்கல், வயது 62
- சீனிவாசன்.கு., திருச்செங்கோடு, வயது 56
- செல்மா.காமராசன், பொத்தனூர், வயது 57