சுருக்கம்
தமிழகத்தின் நாட்டுப்புற சமய மரபில் சித்தர் வழிபாடும், குரு வழிபாடும் முக்கிய இடம் பெறுகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், கோவை, ஈரோடு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபடப்படும் சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாட்டு மரபைப் பண்பாட்டு நோக்கில் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். சாது சிதம்பர சுவாமிகள் ஒரு சமய சீர்திருத்தவாதியாகவும், மக்களின் துயர் துடைத்த ஞானகுருவாகவும் விளங்கியவர். அவரது வழிபாட்டில் அன்னதானம், சமத்துவம், சைவ நெறி, குரு பக்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வியல் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பொதிந்து கிடக்கின்றன. அவரது முன்னோர் வழிபாடு, மருத்துவம், அமாவாசை வழிபாடு, குருபூஜை வழிபாடு, தொண்டர் குல மக்களின் நேர்த்திக்கடன்கள் ஆகியவை தமிழரின் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. இவ்வாய்வு கள ஆய்வு மற்றும் நேர்காணல் முறையில் அமைகிறது. தொண்டர் குல மக்களிடம் பெறப்பட்ட வாய்மொழித் தகவல்கள், வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் நடைமுறைகள், பாடல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் வழி, சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாடு வெறும் சமய நிகழ்வாக மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, ஒழுக்கவியல், சமூக ஒற்றுமை ஆகியவற்றைப் பறைசாற்றும் ஒரு பண்பாட்டுப் பதிவாக விளங்குகிறது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
12 references- சங்கரபாண்டியன்.வெ, வல்லநாட்டுச்சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் வரலாறு, சென்னை: மேடைமணி பதிப்பகம், 2010.
- சோமலெ, தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும், புது தில்லி: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, 1981.
- சௌந்திரராஜன்.கே.வி, இந்தியப் பண்பாடு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1998.
- பரமசிவன்.தொ, பரண், சென்னை:ரிதம் வெளியீடு, 2022
- முத்தையா.ஓ. பண்பாட்டுப் பதிவுகள், சென்னை:காவ்யா பதிப்பகம், 2007.
- வையாபுரிப்பிள்ளை.எஸ்., தமிழர் பண்பாடு, சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்,1958
- Sankarapandiyan.V., Vallanaattu Chithar Saadhu Sithampara Swamigal Varalaru, Chennai: Medaimani Pathippagam, 2010.
- Somale, Tamilnaattu Makkalin Marabum Panpaadum, Puthu Delhi: National Book Trust India, 1981.
- Soundararajan.K.V., Indhiyap Panpaadu, Chennai: Manivasagar Pathippagam, 1998.
- Paramasivan.T., paran, Chennai: Rhythm Veliyeedu, 2022.
- Muthaiya.O., Panpaattup Pathivugal, Chennai: Kavya Pathippagam, 2007.
- Vaiyapuri Pillai.S., Tamizhar Panpaadu, Chennai: Tamil Puthakalayam, 1958.