சுருக்கம்
பண்பாடு என்பது காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடி போன்றதாகும். மனிதனின் நாகரீகத்தைத் தலைமுறை தலைமுறையாயக் கடத்தப்படுபவை மக்களின் பண்பாடு. அதிலும் குறிப்பாக நாட்டார் மக்களின் பண்பாடு ஆய்ந்து அறியப்பட வேண்டிய ஒன்று மக்களின் ஆன்மீக நம்பிக்கையுடன் வழிபாட்டின் அங்கமாய் இருப்பவை தெய்வங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று பத்திரகாளியம்மன் கோயில். பல நாட்டுப்புற மக்களின் வழிபாட்டிற்குரியத் தெய்வமாக இருக்கும் இக்கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறை, திருவிழாக்கள் ஆகிய அனைத்திலும் பண்பாட்டு எச்சம் காணப்படுகிறது. தாய்தெய்வ வழிபாடு தமிழகத்தில் காணப்பட்ட மிக முக்கிய வழிபாடாகும். அத்தெய்வ வழிபாட்டின் ஆதாரமாயும் பல இனக்குழு மக்களின் அடையாளமாயும் விளங்கும் இக்கோயிலின் பண்பாட்டை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
6 references- சக்திவேல்.சு டாக்டர், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, மறுபதிப்பு சனவரி, 2001.
- சண்முகானந்தம்.ஏ, தென்புலத்து மன்பதை பேராசிரியர் தொ.பரமசிவன், உயிர் பதிப்பகம், 4, 5 ஆவது தெரு, சக்தி கணபதி நகர், திருவொற்றியூர், சென்னை 600 019, இரண்டாம் பதிப்பு, நவம்பர் 2023.
- தட்சிணாமூர்த்தி.அ முனைவர், தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை 600 040, திருத்திய மறுபதிப்பு ஏப்ரல் 2021.
- பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, விரிவாக்கப்பெற்ற திருத்திய பதிப்பு : ஏப்தல் 2003
- பாலகிருஷ்ணன்.இரா முனைவர், தமிழ் மொழி சமுதாயம் பண்பாடு, சபாநாயகம் பதிப்பகம், 176, கீழரத வீதி, சிதம்பரம் 608 001, முதற்பதிப்பு டிசம்பர் 2013.
- ரெஜித்குமார்.த டாக்டர், நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் 600 050, மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2020.