தென்தமிழகக் கிறித்தவ மதமாற்றமும் சாதியும்
தென்னிந்தியாவில் கிறித்தவ மதத்தின் வருகை குறிப்பிடத்தக்கது. வணிக நோக்கோடு உள் நுழைந்த காலனிய ஆட்சியாளர்கள் பின்னர் மதபரப்புதலையும் மேற்கொண்டனர்.சமத்துவத்தைப் போதித்த கிறித்தவத்தின் செயல்பாடுகள் இதுவரை சமத்துவத்தைக் கண்டிராத அடித்தள மக்களை ஈர்த்தது. இதனால் பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறினர். ஆதிக்க வகுப்பினரில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார உயர்வுக்காக மதமாற்றத்தை மேற்கொண்டனர். இங்கு நிலவியிருந்த சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஊறியிருந்த ஆதிக்க வகுப்பினரால் அடித்தள மக்கள் தங்களுக்குச் சரிசமமாக கிறத்தவத்தில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்…