இரா. நாறும்பூநாதன் படைப்புகளில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள்

குழந்தை தொழிலாளர் முறை என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு பெரும் சாபக்கேடு ஆகும். குழந்தைகள் வேலைக்குச் செல்வது என்பது ஒரு தனிநபரின் பிரச்சனை அல்ல. அது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தை இருட்டிற்குள் தள்ளும் சமூகக் குற்றமாகும். சட்டங்களினாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினாலும் மட்டும் இந்த அவலத்தை முழுமையாக வேரறுக்க முடியாது என்பதை இரா. நாறும்பூநாதன் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது.

மூன்றாம் உலகப்போர் நாவலில் உழவர்களின் சமூக இருப்பியல்

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் என்ற நாவல் பருவநிலை மாற்றத்தினை உழவுத்தொழிலின் பின்புலத்துடன் பதிவுறுத்துகிறது. தனியார் மயப்படுத்துதல் வேதிநச்சுகளை மண்ணில் உரமாக்குகின்றன. கடன் சுமை, குடும்ப உறவுகளின் முறிவு, நில இழப்பு, தலைமுறை இடைவெளி, ஓசோன்படலப் பாதிப்பு போன்ற சூழலியல் காரணிகள் உழவுத்தொழிலை பின்னலிட்டு அமைகின்றன என்ற உலகமயமாக்கல் மூன்றாம் உலகப்போரின் ஆய்வுப் பொருளாக கட்டமைக்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் – கீழடி பண்பாட்டுத் தளங்கள்

தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான முதன்மையான ஆதாரங்களில் தொல்லியல் அகழாய்வுகள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற புழங்கு பொருட்கள், நாணயங்கள் போன்ற எழுத்து ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, தொழில், உணவு, குடியிருப்பு, இறப்பு மரபு, வணிகம், கைவினை, எழுத்தறிவு ஆகியவற்றை நேரடியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தொல்லியல் தளங்களான ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புழங்கு பொருட்களைச்…

தென் மாவட்ட சடங்கு முறைகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெறும் வாழ்வியல் சடங்குகள் மிகவும் முக்கியமாக பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள சடங்கு சம்பிரதாயங்களை கூறுவதே இவ்வாய்வு ஆகும். “சுருள்வீச்சு” என்னும் சிறுகதைத் தொகுப்பு தென் மாவட்ட பண்பாட்டு பதிவாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலே இக்கட்டுரை அமைகிறது.

தென்மாவட்டங்களில் நாட்டுப்புற நம்பிக்கை

இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில வட்டாரத்தின் நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்து ஆராயப்படுகிறது வாய் மொழியாக மரபுகள் எவ்வாறு மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன என்பதை விளக்குவது முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக கையாண்டு ஆய்வு முறைகள் மற்றும் அதன் முடிவுகள் சுருக்கமாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. முன்னுரை: மனித நாகரீகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே நாட்டுப்புற வழக்காலும் தோன்றி விட்டன. வாய்மொழியாகவும் பார்த்து செய்தல் மூலம் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் தலைகள் பாடல்கள் சடங்குகள் கவிதைகள் பழமொழிகள்…

Women, Nature and Resistance in The Everest Hotel and The Hungry Tide

The unequal relationship between human society and the natural environment has raised important questions about gender, power, and exploitation. While women continue to face gender-based inequalities in many societies, nature is often treated as a resource for human use. Eco-feminism draws attention to these shared patterns of domination and examines the relationship between women and…

Identity and Human Relationships: A Study of Anita Nair’s Lessons in Forgetting and Preeti Shenoy’s Wake Up, Life is Calling

This study focuses on the interplay between identity and human relationships in Anita Nair’s Lessons in Forgetting and Preeti Shenoy’s Wake Up, Life is Calling. Both novelists explore how women navigate personal struggles, emotional challenges, societal expectations, and evolving relationships in contemporary Indian society. The two contemporary Indian women writers explore different aspects of human…

சோ தர்மனின் சூல் நாவல் கூறும் ‘கிராம வாழ்வியல்’

சோ தர்மன் ஐயா படைத்த சூல் நாவலில் பண்பாட்டுக் கூறுகளை இக்கட்டுரை ஆராய்கிறது .வேளாண் தொழிலில் விதை பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளது .கடலை விதை ,வற்றல் விதை , பருத்திவிதை மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் உரம் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது

தென் மாவட்ட நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவமுறை

நாட்டுப்புறவியல் என்பது தமிழ்த்துறையில் வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய துறையாக அமைந்துள்ளது. நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புறப் பழக்கவழக்கங்கள், நாட்டுப்புற கலைகள், நாட்டுப்புற அறிவியல், தொழில் நுட்பம், என்னும் நான்கு பெரும் பிரிவுகள் உள்ள நிலையில் மக்கள் வாழ்வியலுடன் இணைந்த மருத்துவமும் நாட்டுப்புறவியலின் ஓர் அங்கமாகத் திகழ்கின்றது. வீட்டில் நாம் தினம் தோறும் பயன்படுத்தும் உணவுமுறைகளைக் கூட நம் முன்னோர்கள் எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்தினர் என்பதையும், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், மஞ்சள்தூள் முதலிய பொருட்களையே நாட்டுப்புற…

தென்மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளில் தாது வருட பஞ்சம்

தென்மாவட்டப்பகுதிகள் பழமையான பாண்டிநாட்டுப் பகுதியாக போற்றப்படுவனவாகும். அவற்றில் நெல்லை வட்டாரப்பகுதிகளில் பழங்காலந்தொட்டே இலக்கிய ஆளுமைகள் தோன்றி தமிழுக்கு தொண்டாற்றி வந்துள்ளனர். அவ்வகையில் தமிழக வரலாற்று எழுதியலில் மறுக்க முடியாத நிலப்பகுதியாகவும் அமைந்த இப்பகுதி தென்னிந்திய நிலப்பகுதி முழுமையும் நிலவியிருந்த தாது வருட பஞ்சம் பற்றிய பாடுபொருளைக் கொண்டு இலக்கியம் படைத்த புகழுக்கும் உரியதாகும். அவ்வகையில் தாது வருடப்பஞ்சத்தை சுட்டும் சிற்றிலக்கியங்களான பஞ்சலட்சண திருமுக விலாசம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி எனும் இரு நூல்களில் அறியலாகும் வறட்சிப்பற்றிய குறிப்புகளை…