The eyes, with their movements, serve as a crucial component for expressing human emotions and internal states. Eye movements or gestures function as an indispensable part of body language, helping to convey messages, establish communication with others, attract attention, and strengthen relationships. These actions are controlled by brain nerves and neurochemical secretions. It is astonishing that Thiruvalluvar, in his Thirukkural, particularly in the 'Kuripparindhal' (Understanding Gestures) chapter within the 'Kāmattuppāl' (Book of Love/Pleasure) section, explained the profound significance of such eye gestures even in ancient times, linking them with expressions of sexuality, neurological mechanisms, and as a means of revealing inner feelings. This summary explores the multifaceted applications of eye gestures, as well as their scientific and literary dimensions.

Articles
Live in harmony with nature. They learned the ancient cultural tradition. Human began to from nature and began to live with the help of the five elements; land, water, wind and fire. They remained stable in one place through riverine civilization. In these scientific literatures, we can see the alternative traditions that occurred during the Renaissance period, the reasons for the emergence of alternative traditions, and the impacts that alternative cultures had.
உயிரினங்களில் உணர்வு நிலை அடிப்படையில் ஆறு வகைப்படுத்தியுள்ளன. ஆறாவது அறிவினை பெற்றவர்கள் மனிதன். மனிதன் பாலின அடிப்படையில் ஆண், பெண் என்ற இரண்டு பிரிவுகளாக பூமியில் வாழ்கிறார்கள். இதில் பண்டைய கால முதல் இன்று வரை பெண்களின் நிலை பல எதிர்ப்புகளை கடந்தாக இருக்கின்றன. பல கால மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் பெண்களும் பல மாற்றங்களை கடந்து வருகிறார்கள். ஆனால் பெண் வாழ்க்கை சுதந்திரமாகவும், அமைதியாகவும், நிம்மதியான முறையில் அமைவது இல்லை. கால மாற்றத்திற்கு ஏற்ப பெண்களுக்கான பிரச்சனைகளும் மாற்றம் பெற்றுள்ளன. இதில் பெண்களுக்கான உரிமைகளும் கால மாற்றங்களில் ஏற்படும். பெண்களின் சீரழிநிலையினை ஆராய்ந்து அறியலாம்.
“ In the time of the stone Muthakudi – Tamil Kudi “ Our Tamil race is an ancient and proud race. In language, culture, and civilization, it has Secured a unique place, living in the world with love and culture. Kind. It is no exaggeration to say that the Tamil race is appreciated by everyone in the world as a cultured race with its Ethial principles and its standard of living. The grammatical literature created by our ancestors helps us to live and live the human race created by God in the world according to the couplet “ Pirappokkum ella uyirukkum.” It is the foremost in the series of moral books it is Thirukkural.It consists of the three parts of Virtue, Wealth and Pleasure. In 133 chapters, it contains 1330 Couplets. Through Thiruvalluvar’s couplets, man should live with love, decency and ethics of life. He explained in a couplet. From the king to the man, these ideas will always help to live. The purpose of this paper is to see them.
''கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி''
என்ற பழமையும் பெருமையும் வாய்ந்த இனம் நம் தமிழினம். மொழி, பண்பாடு, நாகரிகம் என்ற அனைத்திலும் தனக்கெனத் தனித்த இடம் பிடித்து உலகில் அன்போடும், பண்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் இனம். அறன் வழிப்பட்ட கொள்கைகளும் அதன் வழியிலான வாழ்க்கைத் தரமும் கொண்டு பண்பட்ட இனமாக உலக அளவில் எல்லோராலும் போற்றப்படும் இனம் தமிழினம் எனில் அது மிகையில்லை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திருக்குறளுக்கேற்ப உலகில் இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் வாழ்வாங்கு வாழ்ந்திட நம் முன்னோர் படைத்திட்ட இலக்கண, இலக்கியங்கள் நமக்குத் துணைபுரிகின்றன. அவ்வகையில் நீதி நூல்கள் வரிசையில் முதன்மையானது திருக்குறள் ஆகும். இது அறம்,பொருள், இன்பம் என்ற முப்பால் கொண்டது. 133 அதிகாரங்களில் 1330 திருக்குறட்பாக்களைக் கொண்டுள்ளது. திருவள்ளுவர் இத்திருக்குறட்பாக்கள் மூலம் மனிதன் அன்போடும், பண்போடும், வாழ்வியல் நெறிமுறைகளோடும் வாழ்ந்திட வேண்டும் என்று ஈரடியில் விளக்கியுள்ளார். அரசன் முதல் மானிடன் வரை வாழ்வாங்கு வாழ்ந்திட இக்கருத்து மணிகள் எக்காலத்துக்கும் உதவும். அவற்றினைக் காண்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
பிரபஞ்சன் சிறுகதைகள் சித்தரிக்கும் பாலினச் சமத்துவமின்மைGender inequality depicted in Prabanjan’s short stories
Pages 1035-1039Prapanchan (பிரபஞ்சன்) stands as a prominent figure and significant contributor to the landscape of modern Tamil literature. His short stories are particularly noted for their profound social awareness and their keen sensitivity to the emotional and historical currents of their time.This paper undertakes an analytical study of Prapanchan's short stories, specifically examining how he intricately portrays and critically engages with key societal concepts. The focus will be on themes such as gender, gender distinctions, gender politics, the institution of marriage and family structures, the prevailing societal perceptions of women, and the evolving role of the 'modern woman'. By exploring these narratives, this research aims to uncover Prapanchan's unique perspective and his critical commentary on the social fabric of his era as reflected through these vital issues.
தமிழ் இலக்கியத்தின் நவீனப் பரப்பில் முக்கிய பங்களிப்பாற்றியவர் பிரபஞ்சன். சமூக விழிப்புணர்வோடும், காலத்தின் உணர்வுப் பின்னணியோடும் கூடியதாக அவரது சிறுகதைகள் விளங்குகின்றன. அதில் பாலினம், பாலின வேறுபாடு, பாலின அரசியல், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பு, பெண்கள் மீதான சமூகப் பார்வை, நவீன பெண்கள் போன்ற கருத்துக்கள் பிரபஞ்சன் சிறுகதைகளில் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
நாட்டுப்புற மதுரைகாளியம்மனின் தொன்மமும் வழிபாட்டுச் சடங்குகளும்Mythology and Rituals Madurai Kaliamman’s Folk
Pages 1040-1047From the Day humanity emerged, People have lived life in harmony with nature. When some unnatural changes occur, they start Workshipig them out of Fear. Through the worship of folk deities, Myths are widely used to understand the development of the growth of culture, traditions and arts in human civilization. By transforming the tools of the departed ancestors used into deities.It can be seen among the natives. Divine beliefs are intertwined with the human life. Myths show that the life of the god is transmitted to humans through hearting. The myths of the Gods vary accoeding to the level of human knowledge. People do not see the myths of the gods as stories, They considered them as true events. myths help a lot keep social customs and rituals completely unchanged thorugh deity worship among the country people.
ஆய்வுச் சுருக்கம்:
மனித இனம் தோன்றிய நாளிலிருந்து மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையினை வாழ்ந்தனர். இயற்கைக்கு மாறாக சில மாறுதல்கள் ஏற்படும் பொழுது அச்சத்தின் காரணமாக அவற்றையே வழிபடத் தொடங்கினர். நாட்டுப்புற தெய்வங்களின் வழிபாட்டு மூலமாக மனித இன வளர்ச்சி, பண்பாடுகள், கலாச்சாரம் இவற்றை அறிய தொன்மங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இறந்த முன்னோர்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தெய்வமாக வழிபடும் நிலையினை நாட்டுப்புற மக்களிடையே அறிய முடிகின்றது. தெய்வ நம்பிக்கைகள் மனிதனின் தொன்மையான வாழ்வியலோடு இணைந்திருக்கின்றன. நாட்டுப்புற தெய்வங்களின் வாழ்வியல் மனிதர்களிடம் செவிவழியாக வழங்கப்படுவதே தொன்மங்கள் புலப்படுத்துகின்றன. தெய்வங்களின் தொன்மங்கள் மனிதனின் அறிவு நிலைகளுக்கு ஏற்றார் போல மாறுபடுகின்றன. தெய்வ தொன்மங்களை மக்கள் கதைகளாக பார்ப்பது இல்லை, உண்மை நிகழ்வுகளாகவே கருதுகின்றனர். நாட்டுப்புற மக்களிடையே தெய்வ வழிபாட்டின் வாயிலாக சமுதாய பழக்கவழக்கங்கள், சடங்குகள் முற்றிலும் மாறிவிடாமல் இருக்க தொன்மங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
அகநானூற்றில் நெய்தல் திணை மக்களின் வாழ்க்கை முறைThe lifestyle of the people of Akananuru weaving peoples
Pages 1048-1053Sangam literature is a very admirable ancient literature. It beautifully depicts all the ideas necessary for human life. This research article is based on the ideas expressed in the songs about the people of Neythal. The cultural lifestyle of the people of Neythal is highlighted in this article by examining the residential areas of the fishermen, their fishing industry, salt selling, conch shelling, food habits, hospitality, games, and worship methods.
சங்க இலக்கியங்கள் மிகவும் போற்றத்தக்க பழமையான இலக்கியங்களாகும். இவை மனித வாழ்விற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களையும் அழகாக ஓவியம் போன்று காட்டுகின்றன.நெய்தல் திணை மக்களைப் பற்றி அத்திணை பாடல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு கட்டுரை அமையப் பெற்றுள்ளது. மீனவர்களின் குடியிருப்பு பகுதிகள், அவர்களின் மீன்பிடித் தொழில், உப்பு விற்றல், சங்கு எடுத்தல் போன்ற தொழில் முறைகளையும், உணவு முறைகள், விருந்தோம்பல், விளையாட்டுகள், வழிபாட்டு முறைகள் ஆகியவைகளை ஆராய்வதன் வழியாக நெய்தல் நில மக்களின் பண்பாட்டு வாழ்க்கை முறையும் இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
பெண்களுக்கான சிறப்பு உணவுகள்Special Foods for Women
Pages 1054-1062The Tamil community is a society that places great importance on women. From infancy to old age, across seven distinct life stages, the Tamil community protects women by providing them with appropriate foods tailored for each phase. Particularly during pregnancy and the postpartum period, the Tamil community offers special foods to safeguard both the mothers and their infants. The specific foods given during the postpartum period vary by region, based on locally available ingredients. Special dietary practices are customary for every stage of a woman's life, from childhood and menarche to pregnancy and old age.
பெண்களுக்கான சிறப்பு உணவுகள் மருத்துவர் க.அன்பரசு முனைவர் பட்ட ஆய்வாளர், சித்த மருத்துவத்துறை. தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர் 10 முனைவர் மருத்துவர் பெ. பாரதஜோதி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர். சித்த மருத்துவத்துறை. தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர் 10 ஆய்வுச்சுருக்கம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த சமூகம் தமிழ்ச் சமூகம் ஆகும். சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்து முதுமை அடையும் வரை உள்ள ஏழு வகையான பருவங்களில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப உணவுகள் அளித்து பெண்களைப் பாதுகாப்பது தமிழ்ச்சமூகம். குறிப்பாக கர்ப்பகாலத்திலும் மகப்பேற்றிற்கு பின்பும் பெண்களுக்குச் சிறப்பு உணவுகளை அளித்து பெண்களையும் சிசுக்களையும் காப்பது தமிழ்ச் சமூகம். மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் உணவுகள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடும். அவை அங்கே கிடைஉணவுப்பொருட்களைச் சார்ந்தே அமைகின்றன. சிறுபிள்ளைப் பருவத்தில் இருந்து பூப்படைதல், மகப்பேறு காலம், வயோதிகம் என ஒவ்வொன்றிற்கும் சிறப்பு உணவுகள் வழக்கத்தில் இருக்கின்றன.
திருப்பத்தூர் வட்டார மக்கள் பண்பாட்டில் வேட்டைச்சடங்குகள்Hunting Rituals in the Folk Culture of the Tirupattur Region
Pages 1063-1072This article is a study of two rituals, Parivettai and Pulikuttu, performed in Tirupattur taluk of Sivaganga district. These rituals are an important event in the worship tradition of folk deities. Social unity and the way of sharing food are expressed through rituals. Rituals show that every community is given an opportunity. This study also indicates that these rituals are slowly disappearing due to the development of science.
இந்த ஆய்வுக்கட்டுரை, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் வட்டத்தில் நிகழ்த்தப்படும் பரிவேட்டை மற்றும் புலிக்கட்டு ஆகிய இரண்டு சடங்குகள் பற்றிய ஆய்வாகும். இந்தச் சடங்குகள் நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டு மரபில் ஒரு முக்கிய நிகழ்வுகளாகும். சமூக ஒற்றுமையும் உணவுப் பகிர்வு முறையும் சடங்குகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்தவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை இச்சடங்குகள் எடுத்துக்காட்டுகின்றன. அறிவியல் வளர்ச்சியால் இந்தச் சடங்குகள் படிப்படியாக மறைந்து வருகின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சிThe Development of Tamil Language Education in Sri Lanka
Pages 1073-1079Tamil language education holds a unique place in the social, political, and cultural history of Sri Lanka. The development of Tamil language education has been influenced and advanced by various impacts across different periods. This research paper examines how Tamil language education evolved and developed from the colonial period to the present day. Initially, Tamil language education was sustained through monasteries, thinnai schools (traditional veranda schools), and Shaivite and Buddhist religious schools. During the colonial era, especially under Portuguese, Dutch, and British rule, missionary schools and government schools played a significant role in Tamil education. During this period, Tamil language education underwent a temporary shift from a religious basis to a formal school-based system. Before and after independence, a crucial milestone in the development of Tamil language education was the 1945 Free Education Policy. Currently, Tamil language education is becoming firmly established in higher education and technical education in Sri Lanka due to information technology, trilingual policy, and private and international cooperation. This research aims to explain the development of Tamil language education in Sri Lanka.
இலங்கையின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழிக்கல்வி தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. தமிழ் மொழிக்கல்வி வளர்ச்சியானது பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தாக்கங்களால் பாதிக்கப்பட்டு முன்னேறியுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை காலனித்துவ காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை தமிழ்மொழிக் கல்வி எவ்வாறு உருவாகி வளர்ச்சி பெற்றது என்பதை கவனிக்கிறது. ஆரம்பத்தில் தமிழமொழிக் கல்வி மடாலயங்கள், திண்ணைப் பள்ளிகள், சைவ மற்றும் பௌத்த மதப் பாடசாலைகள் மூலமாக நிலைத்திருந்தது. காலனித்துவ காலத்தில் குறிப்பாக போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழ்க் கல்வியில் மி~னரிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்காற்றின. இந்த காலத்தில் தமிழ்மொழிக் கல்வி மத அடிப்படையில் இருந்து முறையான பாடசாலை அடிப்படைக்கு தற்காலிக மாற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல்கல் 1945 இலவசக் கல்விக் கொள்கையாகும். தற்போது தமிழ்மொழிக் கல்வி இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், மும்மொழிக் கொள்கை, தனியார் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு காரணமாக உயர்கல்வியிலும் தொழில்நுட்பக் கல்வியிலும் நிலைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சியை விளக்கும் நிலையில் இவ்வாய்வு அமைகிறது.
The aim of this article is to present the problems of women, the purpose of solving them, and the awareness of women through in-depth discussions, to improve the lives of women, and to highlight the injustices, exploitation, and sexual abuse that occur to women in this society, and to highlight the problems of the lives of poor and ordinary people through storytellers to the outside world.
"ஒரு தாத்தாவும் எருமையும்" என்னும் சிறுகதை தொகுப்பானது பெண்களுக்கானச் சிக்கல்களையும், அவற்றைக் கலையும் நோக்கத்தினையும், பெண்களுக்கான விழிப்புணர்வையும் ஆழ்ந்த விவாதங்களுக்கு உட்பட்டும் பெண்களின் வாழ்வு மேம்படவும், இச்சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளும், சுரண்டல்களும், பாலியல் வன்கொடுமைகளும், வெளி உலகத்திற்கு கதை தொகுப்பாக கதை மாந்தர்களின் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வியல் சிக்கல்களை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தாய்த்தெய்வ வழிபாட்டில் மூங்கிலணை காமாட்சியம்மன்THE MOTHER GODDESS WORSHIP OF MOONGILANAI KAMAATCHIYAMMAN
Pages 1088-1095The saying "What is in the cosmos is in the body" is a tenet of the Siddhars. Here, "Cosmos" refers to the Universe and "Body" refers to a Human being. The Universe is composed of the five elements, and the human body is also made of these same five elements. Realizing the benefits and power of these elements, humans began to worship them as deities. The worship of the five elements has been practiced since ancient times. People worshipped the Earth and Water upon seeing their ability to produce new things. They also worshipped women as goddesses after understanding their ability to create new life and protect the family. The Earth was revered as the Earth Goddess, and water bodies were honored with feminine names, which led to the emergence of the first Mother goddess worship. Mother goddesses were often worshipped outside of the village and as virgin deities. The objective of this research is to study the history of Moongilanai Kamakshi Amman temple and the worshipping practices to the mother goddess.
அண்டத்தில் உள்ளதே பிண்டம் என்பது சித்தர்களின் வாக்காகும். அண்டம் என்பது உலகத்தையும் பிண்டம் என்பது மனிதனையும் குறிக்கும். உலகம் என்பது ஐம்பூதக் கூறுகளால் ஆக்கப்ட்டது. மனித உடலும் ஐம்பூதக் கூறுகளால் ஆக்கப்பட்டது. ஐம்பூதங்களின் நன்மையையும் ஆற்றலையும் கண்ட மனிதன் அவற்றைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினான். ஐம்பூதங்களின் வழிபாட்டு முறையானது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது. நிலமும் நீரும் புதிய பொருட்களை உற்பத்தி செய்வதைக் கண்டு நிலத்தையும் நீரினையும் வணங்கினான். பெண் என்பவள் புதிதாக உயிரினை உருவாக்குவதையும் குடும்பத்தினைப் பாதுகாப்பதையும் அறிந்து பெண்ணைத் தெய்வமாக வழிபட்டான். நிலத்தினை நிலமகளாகப் போற்றினான். நீர்நிலைகளை பெண்ணின் பெயராலேயே சிறப்பித்த நாள் முதல் தாய்த்தெய்வ வழிபாட்டுமுறை தோன்றியது. தாய்த்தெய்வ வழிபாட்டு முறையானது பெரும்பாலும் ஊருக்கு வெளியேயும் கன்னி தெய்வமாகவும் வைத்து வழிபடப்படுவதாகும் தாய்த் தெய்வ வழிபாட்டின் அம்சமாகவும் ஊருக்கு வெளியேயும் இருக்கும் மூங்கிலணை காமாட்சியம்மனின் தலவரலாற்றினையும் வழிபாட்டு முறைகளையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
தத்துவப் பிரகாசத்தில் ’நீர்’ என்னும் வழக்குச் சொற்கள்In the philosophical light, the term 'water' is used
Pages 1096-1101In the structures of organisms, variations can be found in the appearance of each organism. As a biological phenomenon, water (masculinity) is affirmed as the strength of creation. The actions of water in various places that are rich in water resources are recorded in the characteristics of scientific properties as 'stream, brook, river, pond, lake, reservoir, tributary' and are expressed metaphorically in literature by scholars and creators as well as in the practical language of life. The meanings of water encompass the aspects of verbal expression, visual representation, and metaphorical interpretation, contributing strength from the poets of the Sangam period to the creators of the modern era.
உடற்கூறின் அமைப்புகளில், ஒவ்வொரு உயிரினத் தோற்றவுருவில் வேறுபாடுகள் கிடைக்கின்றன. உயிரின இயக்கவூக்கியாக, ஈரப்பண்பினமாக நீர் (ஆண்மை) வலிமையுடையதாக படைப்புலகின் வலித்தலாகிறது. எந்தெந்த இடத்தின் நீர் வளமையானதின் செயலை அறிவியல் பண்பின் குணமாக ‘அருவி, சுனை, ஆறு, ஆழி, ஏரி, குளம், ஓடை’ இயல்பின் நீராற்றலை புலவர்கள், படைப்பாளர்கள் இலக்கியங்களில் உவமைச் சொல்லாகவும் வாழ்வியலின் பயன்பாட்டுச் சொல்லாகவும் பதிவாக்கம் செய்துள்ளனர். நீரின் சொல்லுருவப் பொருள், காட்சிப் பொருள், உவமைப் பொருள் என்ற நிலைகளில் சங்ககாலப் பாடுநர்கள் முதல் புத்துலகப் படைப்பாளர்கள் வரையும் வலிமை சேர்க்கப்படுகிறது.
This article aims to investigate the hardships faced by the Irular community due to their way of life, their state of slavery resulting from their nomadic existence, the reasons for becoming bonded laborers, and the places where this bonded labor is performed. It details and examines how, due to the importance they attach to rituals, they are made to take advance payments, which eventually enslaves them and forces entire families into bonded labor in rice mills, brick kilns, agricultural fields, and domestic work. It further elaborates on how they are forced to work excessively by landlords and dominant social groups. The article points out that a lack of education is one of the reasons for the continuation of bonded labor in some places and makes a plea for the government to provide educational counseling to them. Ultimately, this article is structured to establish that improving the lives of the Irular community is not only the responsibility of the government but a duty for all of society.
இருளர்களின் வாழ்க்கை முறையால் அவர்கள் அடைந்துள்ள இன்னல்களைப் பற்றி ஆராயும் நோக்கமும், இம்மக்களின் நாடோடி வாழ்க்கையால் இவர்கள் அடைந்துள்ள அடிமை நிலையையும், கொத்தடிமையாக மாறியதற்கான காரணங்களையும், கொத்தடிமை வேலை செய்யும் இடங்களையும் பகுத்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன. சடங்குகளுக்கு இவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக முன்பணம் பெற்று இறுதியில் இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு அரிசி ஆலை, செங்கல் சூலை, விவசாய வேலை, மற்றும் வீட்டு வேலைகளில் குடும்பத்துடன் அடிமைப்படுத்தப்பட்டு வேலை செய்யும் நிலையையும் மற்றும் நிலக்கிழார்களாலும், ஆதிக்க சமூகத்தினராலும் அடிமைப்படுத்தப்பட்டு இவர்கள் அதிக அளவு வேலை வாங்கப்படுவதைப் பற்றி விவரித்து ஆராயப்பட்டுள்ளன. கல்வியறிவு பெறாமல் இருப்பதே இன்னும் சில இடங்களில் கொத்தடிமைகளாகத் தொடர்வதற்கு ஒருவகையில் காரணம் என்பதை சுட்டிக்காட்டி அவர்களிடம் கல்வி பற்றிய ஆலோசனைகளை அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து, இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அரசு மட்டுமல்லாது அனைத்து சமூகங்களின் கடமை என்பதை நிறுவும் வகையில் இக்கட்டுரையானது அமைகிறது.
Understanding Thirukkural: A Positive Psychology Perspective
Pages 1107-1114The current study takes a conceptual approach to the mind and how it relates to wellbeing. The prevalence of mental health problems in countries has increased alarmingly during the past ten years. When a person's internal stability permits them to use their ability to align with society's ideals through basic cognitive and social abilities, emotional expression, empathy, and flexibility, they are said to be in a productive state of mental health. Thirukkural is regarded as a highly moral work of Tamil literature that was passed down from man to man over 2,000 years ago. Life, development, death, decay, reputation, money, feeling, and passion are all based on the human mind. There are differing views on the resides of the mind, but everyone agrees that the mind is the source of all speech, cognition, and behaviour. All of life's activities will be pure and moral acts will occur in accordance with a pure thought. The study employs a qualitative approach to provide an overview of the mental framework utilizing ancient Tamil scriptural texts. Finding entails, a thorough investigation and examination of Thirukkural, its practice, and the literature in terms of its background and content for a comprehensive mental understanding.
Inscriptional evidence on the Valour of Rājasiṃha Pallava
Pages 1115-1120Inscriptions are ancient writings or carvings etched onto stone, metal, pottery, and other durable materials, often created to convey information, commemorate events, or honor individuals that provide a glimpse into the lives, beliefs, and events of past civilizations. They are a source of information about the past, and are studied by historians, archaeologists, and researchers. Inscriptions serve as primary sources of historical information, preserving records of events, rulers, and societal norms. They offer insights into the development and evolution of languages and scripts over time. Inscriptions provide valuable information about the cultural and religious practices of ancient civilizations. The study of inscriptions is called Epigraphy. Inscriptions record the achievements of kings, activities of people who commissioned them, record the ideas of people and the like. Dedication Inscriptions, Commemorative Inscriptions, Funerary Inscriptions, Legal and Administrative Inscriptions are a few types of inscriptions. Deciphering an Inscriptions ma results in Multilingual Texts, Comparative Analysis, Technological Advancements, etc,.
This paper deals with an ancient Pallava inscriptional poem in Saṃskṛtam consisting of 12 verses in the form of a eulogy (Praśasti) of the Pallava King discovered and published by E.Hultzsch a century ago. Rājasiṃha alias Narasiṃhavarman II (c.A.D. 670 – 700) is a king adorned with many epithets like atyantakā, Śrῑbhara, Raṇajaya and is compared with Lord Viṣnu and Lord Śiva. The Praśasti consists of 12 verses employing various metres about the King and his valour.
ஜென்ம பூமிகள் நாவலில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சடங்கு முறைகள்Tea Plantation Workers Rituals in The Novel of Jenma Boomigal
Pages 1121-1128Sri Lankan tea plantation workers are among those who have gone to many countries to survive the famine due to poverty. If they want to harvest tea on a new hill, they worship the tea plant and sing a beautiful song to get more tea. After bathing a woman who has reached puberty, the male attendant makes her sit inside the house. They also believe that Rodhamuni will attack the woman who has reached puberty. The wedding is held on an auspicious day and time. A congratulatory song is sung during the wedding. Ayyanar Swami is worshipped as a deity. Women offer Pongal to Ayyanar and sing the song Kummi and rejoice. When someone in the ethnic group dies, they tie a white flag in front of the house to mark the deceased. The Oppari song is sung on the occasion of death. This research article is intended to describe such unique life rituals.
திருஞானசம்பந்தரின் திருவைந்தெழுத்துப் பதிகங்கள்Thirugnanasambandhar's Panchachara Mantra Hymns
Pages 1129-1134This article explores the spiritual and theological significance of the sacred five letters mantra, also known as the Panchachara mantra or the five-letter mantra (Na–Ma–Shi–Va–Ya), within the framework of Shaiva Siddhanta. Recognized as both a sound embodiment of divinity and a symbolic representation of Lord Shiva as the Shivalinga, this mantra is revered as the essence of the four Vedas and their ultimate meaning. Central to this study is the contribution of Thirugnanasambandhar, the child saint from Thiruthonipuram. He received divine wisdom from Goddess Umayammai and composed the first three Thirumurais, embedding the divine name—the sacred five letters - within his hymns.The article critically examines the sacred five letters padhigangal of Thirugnanasambandhar through various dimensions, including the mantra’s hidden scriptural meanings, its structural significance as five sacred syllables, and its devotional application through the Thiruppanchachara Tirupathigam and the Thirunamachivaya Tirupathigam. Further sections elaborate on the correct method of recitation and the spiritual uses of the mantra in daily practice. By analyzing these aspects, the article aims to highlight the centrality of the sacred five letters in the devotional and philosophical thought of Shaiva Siddhanta. The study concludes by reaffirming the enduring spiritual value of Thirugnanasambandhar’s hymns in preserving and promoting Vedic wisdom through the name of Shiva.
This article explores how the novel "Kovai Kazhudhaigal" (Mule Donkeys) by Imayam subtly documents the pains and oppressions faced by marginalized communities in society. This novel, significant in Dalit literature, extensively discusses the complexities of caste discrimination, economic exploitation, and social exclusion. This study focuses on the life struggles of Arogyam, the primary female protagonist in the novel. The professional rituals she encounters, the psychological and physical torments she endures, and the challenges of a woman-led household are examined. Through this, the study brings to light the identities and sufferings of Dalit people from a deep social perspective. This research offers new angles for understanding Dalit life and its literary representations.
இக்கட்டுரை, இமயம் எழுதிய கோவேறு கழுதைகள் நாவலை மையமாகக் கொண்டு, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகளையும் எவ்வாறு நுட்பமாகப் பதிவு செய்கிறது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. தலித் இலக்கியப் போக்கில் முக்கியத்துவம் பெறும் இப்புதினம், சாதிப் பாகுபாடு, பொருளாதாரச் சுரண்டல், மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றின் சிக்கல்களை விரிவாக விவாதிக்கிறது. இந்த ஆய்வானது, புதினத்தில் வரும் ஆரோக்கியம் என்ற முதன்மைப் பெண் கதாபாத்திரத்தின் வாழ்வியல் போராட்டங்களை மையப்படுத்துகிறது. அவள் எதிர்கொள்ளும் தொழில்சார் சடங்குகள், உளவியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்கள், மற்றும் பெண் தலைமை தாங்கும் இல்லறத்தின் சவால்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதன்மூலம், தலித் மக்களின் அடையாளங்களையும், அவர்களின் துயரங்களையும் ஆழமான சமூகப் பார்வையில் இருந்து இந்த ஆய்வு வெளிக்கொணர்கிறது. இந்த ஆய்வு, தலித் வாழ்வியலையும், அதன் இலக்கியப் பதிவுகளையும் புரிந்துகொள்வதற்கான புதிய கோணங்களை முன்வைக்கிறது.
The most ancient form of worship found among the Tamils is the worship of the Mother Goddess. This type of worship has been seen from ancient times to the present. Man began worshipping nature itself. There are many references to this type of worship in Sangam literature. This article aims to examine how this type of worship of the Mother Goddess exists in the history of Tamil Nadu using Tamil literature. It also looks at the remains of the worship of the Mother Goddess of the ancient Tamils. This article uses the historical method approach and the interpretive approach.
தமிழர்களிடையே காணப்பட்ட மிக தொன்மையான வழிபாடு தாய்தெய்வ வழிபாடு. பண்டைய காலம் முதல் இக்காலம் வரை இவ்வகையான வழிபாடு காணப்பட்டு வருகிறது. மனிதன் இயற்கையிலிருந்தே வழிபாட்டை தொடங்கினான். சங்க இலக்கியங்களில் இத்தைகைய வழிபாட்டிற்கான குறிப்புகள் ஏராளமாக காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்களை வைத்து இவ்வகையான தாய்தெய்வ வழிபாடு தமிழக வரலாற்றில் எப்படி பரவியுள்ளது என ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. பண்டைய தமிழரின் தாய்தெய்வ வழிபாட்டின் எச்சங்களை காண முயல்கிறது. இக்கட்டுரையில் வரலாற்று முறை அணுகுமுறை மற்றும் விளக்கமுறை அணுகமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சித்தர்களின் மெய்ஞான - விஞ்ஞான அறிவுThe True Knowledge of The Siddhas Scientific Knowledge
Pages 1146-1150The tradition of Siddhas emerged in the medieval period of the historical region of Tamil Nadu. These Siddhas excelled in Siddha medicine. They paved a solid path for the soul and penance. Siddhas were seen in three categories as Sanmarkachiddhas, Gnana Siddhas, and Gaya Siddhas. At that time, Siddhas were the ones who contributed to the development of science and the field of science. They were the ones who discovered medicines suitable for diseases. This article aims to explain how the true knowledge and scientific knowledge of the Siddhas was found in the medieval period as they discovered the methods for living a long life in this world.
தமிழக வரலாற்றுப் பகுதியின் இடைக்காலத்தில் சித்தர்களின் மரபு தோன்றிற்று. இச்சித்தர்கள் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கி வந்தார்கள். உள்ளத்துக்கும், தவத்திற்கும் உறுதியான பாதையை வகுத்தார்கள். சித்தர்கள் மூன்று பிரிவுகளாக சன்மார்க்கச்சித்தர்கள், ஞான சித்தர்கள், காயச் சித்தர்கள் என காணப்பட்டனர். அக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியிலும், அறிவியல் துறையிலும் ஞானத்ததை பதித்தவர்கள் சித்தர்கள். திணைகளுக்கு ஏற்ற மருந்துகளை கண்டறிந்தவர்கள். இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வதற்கான வழிமுறைகளை இடைக்காலத்திலே கண்டறிந்ததால் சித்தர்களின் மெய்ஞான – விஞ்ஞான அறிவு எவ்வாறு காணப்பட்டது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
ஐங்குறுநூறு அகத்திணை மரபும் வாழ்வியல் விழுமியங்களும்The Tradition of Ainkurunuru’s Akattinai and its Life Values
Pages 1151-1155This study explores the expression of Akattinai concepts in the Sangam-era literary work Ainkurunuru. Akattinai represents the emotional and inner world of humans, depicting feelings such as love, separation, sorrow, joy, modesty, and affection, often in harmony with nature. The five classical landscapes Thinai, Kurinji, Mullai, Marutham, Neithal, and Palai—are central to these depictions. Moreover, the text emphasizes themes such as the dignity of labor, domestic virtues of women, maternal affection, the wisdom of caretakers, and social customs, thereby broadening the scope of Akattinai. Human life is portrayed through interactions with living beings and natural symbols, providing a rich and nuanced understanding of personal and social experiences. Consequently, Ainkurunuru is considered a seminal work that not only showcases the richness of the Akattinai tradition but also reflects the depth and values of Sangam culture. This study aims to examine these dimensions in detail.
சங்ககால இலக்கியமான ஐங்குறுநூறு நூலில் அகத்திணைச் சிந்தனைகளின் வெளிப்பாட்டை ஆராய்கிறது. அகத்திணை என்பது மனித மனத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகும். அன்பு, பிரிவு, துயரம், மகிழ்ச்சி, நாணம், பாசம் போன்ற உணர்வுகள் இயற்கையோடு இணைந்து சித்தரிக்கப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. மேலும், உழைப்பின் மகத்துவம், பெண்களின் இல்லற மாண்பு, தாயின் பாசம், செவிலியின் அறிவுரை, சமூக மரபுகள் போன்றவை அகத்திணையின் பரிமாணங்களை விரிவாக்குகின்றன. மனித வாழ்க்கை அஃறிணை உயிர்கள் மற்றும் இயற்கைச் சின்னங்களின் மூலம் வெளிப்படுகிறது. ஆகவே, ஐங்குறுநூறு அகத்திணை மரபின் செறிவையும் சங்க பண்பாட்டின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. இதனைக் குறித்து ஆய்வதே இங்கு நோக்கமாக அமைகின்றது.
திருக்குறள் காட்டும் இல்லற, துறவற மேலாண்மைThirukkural kattum illara, turavara melanmai
Pages 1156-1161From the early reign of the king to the life of the people of the present society, the idea of management is fundamental to everything that is the reason for proper function. Thoughts are what lead humans to the next level. An example of this can be said to be the analytical nature of man. Such rational humans began to create their thoughts in books. Thirukkural, which is a common knowledge for all the people of the world.This article is designed to highlight and explain with examples the management ideas revealed in the book Thirukkural.
தொடக்க கால மன்னர் ஆட்சி முதல் தற்போதைய சமுதாய மக்களின் வாழ்க்கை வரை அனைத்திலும் சரியான முறையில் செயல்பட மேலாண்மை என்ற சிந்தனை அடிப்படையானது. சிந்தனைகளே மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு உதாரணம் மனிதனின் பகுத்தற்றிதல் பண்பு என்று கூறலாம். அத்தகைய பகுத்தறிவு மனிதன் தம் சிந்தனைகளை நூல்களில் படைக்க ஆரம்பித்தனர். உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாக அமைந்துள்ள நூலான திருக்குறளில் வெளிப்படும் மேலாண்மைச் சிந்தனைகளை எடுத்துரைத்து உதாரணத்துடன் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
பனை மரங்களின் (Palms) மகத்துவம் — அடுத்த தலைமுறைக்கு ஆய்வு கட்டுரைThe Profound Significance of Palms: A Legacy for the Next Generation
Pages 1162-1172பனை மரங்கள் (date-palm, coconut, oil-palm மற்றும் வனப் பனைகள்) மனித வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய பல்வேறு பண்புகளை தாங்கி நிற்கின்றன. இயற்கை வளங்களைக் காக்கும் திறன், உயிரணுக்குச் சேவை, உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், வருமான ஆதாரம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் தன்மை ஆகியவை பனை மரங்களை முக்கிய உயிரியல் மற்றும் சமூக வளங்களாக ஆக்குகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் பனை சார்ந்த பொருட்கள் – பனை சர்க்கரை, இலைகள், நார், கிழங்கு மற்றும் காய் – சிறு தொழில்கள், கைவினைத் துறை மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கிராமிய வாழ்வாதாரம் நிலையானதாகவும் பல்துறை வாய்ப்புகளுடன் கூடியதாகவும் உருவாகிறது. இருப்பினும், சமீப காலத்தில் அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்படும் oil-palm ஒரையாட்சி (monoculture) முறைமைகள் சூழல் சமநிலையைக் குலைத்து, நிலத்தர குறைபாடுகள் மற்றும் உயிரின மாறுபாட்டின் இழப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சவால்களை சமாளிக்க பாரம்பரிய சூழல் அறிவு (traditional ecological knowledge) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, நிலைத்தன்மை மிக்க agroforestry மாதிரிகளை உருவாக்குவது அவசியமாகிறது. பனை மரங்களை பலவகை உட்பொருள் பயிர்களுடன் இணைத்து வளர்ப்பது நிலத்தின் பயன்திறனை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் உறுதி செய்கிறது.
இந்த கட்டுரை சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் பனை மரங்களின் சுற்றுச்சூழல், சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பயன்களை விரிவாக மதிப்பீடு செய்கிறது. மேலும் அடுத்த தலைமுறைக்கு பனை மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், அவற்றின் அறிவு பரவல், மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பயன்களை மேம்படுத்தும் பரிந்துரைகளையும் வழங்குகிறது. இவ்வாறு பனை மரங்கள் நிலையான விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய முன்னேற்றத்திற்கு மையக் குருதியாக விளங்கும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
தாழனூர் ஆதியன் இன மக்களின் வாழ்வியல் சிக்கல்The social issues of the Aadhiyan community of Thalanur
Pages 1173-1178This study aims to investigate the difficulties faced by the Aadhiyan community, a group of nomadic cattle herders. The research focuses on their nomadic lifestyle, the daily challenges they encounter, and their ostracization by the dominant community. The Aadhiyan community is economically backward and faces significant obstacles in accessing employment and education due to the lack of Caste Certificates, which are essential for these opportunities. Despite the critical need, these certificates have not yet been issued to them.This paper advocates for the provision of Caste Certificates and argues that improving the lives of the Aadhiyan people is a responsibility not only of the government but of all people.
ஆதியன் என்கின்ற பூம்மாட்டுகார மக்கள் வாழ்க்கை முறையால் அவர்கள் அடைந்துள்ள இன்னல்களைப் பற்றிய ஆராயும் நோக்கமும் இவர்களின் நாடோடி வாழ்க்கையும் இவர்கள் அடைந்துள்ள அன்றாட சிக்கல்ளையும் ஆதிக்கச் சமூகத்தினரால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டும் பொருளாதாரத்தில் பின்தங்கியும் வேலை கல்வி என அனைத்திற்கும் சாதி சான்றிதழே முக்கியமாக கருதப்படுகிறது. இருப்பினும் இவர்களுக்கு சாதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இச்சான்றிதழை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து இவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது அரசு மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் கடமை என்ற அடிப்படையில் இக்கட்டுரையானது அமைகிறது.
சங்க இலக்கியங்கள் காட்டும் தற்கால சட்ட முன்வரைவுகள்Contemporary Legal Blueprints Reflected in Sangam Literature
Pages 1179-1194This research paper employs a comparative approach to investigate the congruence between contemporary legal statutes and the ethical and social tenets of the Tamil lifestyle described in classical Sangam literature. The Sangam poems reveal that the ancient Tamils prioritized principles of democratic governance and communal consensus from very ancient times. Our classical texts portray the monarch (known as the Vendhar) as the supreme ruler responsible for ensuring the welfare and comprehensive protection of the citizenry. In this structure, service to the people was held in the highest possible regard. Scholars and advisors were appointed to keep the rulers informed of the state of the nation. The Poets (Pulavars) served as essential conduits, communicating the status of the populace, the military strength of neighboring kingdoms, and the prevailing sentiments of the nation to the monarch. Crucially, as reflected in ancient literature, the Pulavars possessed the right not only to eulogize the king but also to openly critique and correct his errors and failures. The objective of this study, supported by substantive evidence, is to demonstrate that just as modern constitutions codify specific citizen rights, the political structure of ancient Tamilakam mandated that the king govern by keenly understanding and fulfilling the fundamental needs of the people. This reveals a sophisticated, ancient system prioritizing the well-being of the populace that mirrors the intent of modern legal blueprints.
இந்த ஆய்வுக்கட்டுரையானது தற்காலச் சட்டங்கள், செவ்வியல் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தமிழர் வாழ்வியல் நெறிகளோடு எந்தெந்த வழிகளில் ஒத்து இருக்கிறது என்பது குறித்து ஒப்பியல் நோக்கில் ஆராய்கிறது. தமிழர்கள் பண்டைய காலந்தொட்டே மக்கள் ஆட்சிக்கு முக்கியத்துவம் அளித்து இருந்ததைச் சங்கப் பாடல்கள் வழி அறிய முடியும். நமது இலக்கியங்கள் மன்னரை வேந்தராகவும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குபவராகவும் குறிப்பிடுகின்றன. மக்களுக்கு ஆற்றும் சேவையை உயர்வாகக் கருதினர். மன்னர்களுக்கு நாட்டின் நிலையை உணர்த்த அறிஞர்கள் இருந்தனர். நாட்டு மக்களின் நிலை, அண்டை நாட்டு மன்னர்களின் படைபலம், நாட்டு மக்களின் உணர்வுகள் ஆகியவற்றை மன்னனுக்கு எடுத்துக்காட்டும் கருவியாகவே புலவர்கள் இருந்து வந்தனர். பண்டைய இலக்கியங்களில் மன்னரைப் புகழ்ந்து பாட மட்டுமின்றி, அவரது தவறுகளை இடித்துரைக்கும் உரிமையும் புலவர்களுக்கு இருந்தது. நமது நாட்டு அரசியலமைப்புப்படி மக்களுக்கு என்ன உரிமைகள் உள்ளது என வரையறை செய்யப்பட்டுள்ளதோ அதுபோல பண்டைய தமிழகத்தில் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மன்னன் அரசாள வேண்டும் என்கிற நிலை இருந்து வந்துள்ளது என்பதை உரிய சான்றுகளோடு வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
