மனிதச் சமூகம் காலந்தோறும் பெறும் அனுபவங்களின் வெளிப்பாடாக அமைவன தொன்மங்கள். கடந்தகாலத்தின் நினைவுகளையும் வரலாற்றையும் பண்பாட்டையும் நிகழ்காலத்திற்குக் கடத்தி வருபவையாக இத்தொன்மங்கள் செயல்படுகின்றன. அவ்வகையில் சமூகத்தின் பிரதிபலிப்பாக அமையும் இலக்கியங்களிலும் இத்தொன்மங்கள் காலந்தோறும் செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன. இந்தியச் சூழலில் புராணங்களைச் சார்ந்த தொன்மங்கள் இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. அவற்றில் ‘சீதை’ தொன்மம் முதன்மையானது. அதனடிப்படையில் தமிழ், வங்காளத் தொன்ம மறுவாசிப்புப் புதினங்களில் ‘சீதை’ தொன்மம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது

Vol. 1 No. 02 (2024)
Tamilmanam November 2024
- Published
தமிழ்மணம் நவம்பர் 2024
தொகுதி 01 வெளியீடு 01 2024
Articles
மானுட வரலாற்றில் பெண்கள் தங்கள்அடையாளங்களை மெல்ல இழந்து சுயமற்ற நிலையில் காணப்படுகின்றனர். வரலாற்றில் பெண்களின் முக்கியமான, ஆற்றல் மிக்க பங்களிப்புகளின் சில குறிப்புகள் இருந்தாலும், அவர்கள் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு, உதைக்கப்பட்ட குறிப்புகள்தாம் பரவலாக உள்ளன. பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் அவ்வாறு துன்புறுத்தப்பட்டதுமில்லாமல் பிறப்பு, முன்னோர் கருத்து, கடவுள் கொள்கை என்று அவை நியாயப்படுத்தப்பட்டு பண்பாடு என்ற பெயரால் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. பெண், ஆண் இடையே இன்று நாம் காணும் வேறுபாடுகள் இயல்பானவையல்ல. அவை ஒரு காலத்தில் ஒருவராலோ, அல்லது சிலராலோ, வர்க்க, இன, சமய, பால், மத அடிப்படையில் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆண் உயர்ந்தவன் என்பதும் பெண் தாழ்ந்தவள் என்பதும் இயற்கையும், கடவுளும் உருவாக்கியவை அல்ல.
நம் தமிழ்மொழியின் பல்வேறு வகை இலக்கியங்களில் வழியே. அறம், பொருள், இன்பம், வாழவேண்டிய முறை, கலை, பண்பாடு, நாகரிகம் இயற்கை, அறிவியல் என உலகின் பல்வேறு வாழ்வியல் கூற்றுக்களை மிகத்தெளிவாகவே நாம் அறிந்துகொள்ளலாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சூழல் மண்டலம் பல்உயிரி, சுற்றுச்சூழல் கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து வெகு காலம் முன்னரே நம் தமிழ் இலக்கியங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. சங்க இலக்கியங்களிலும் தாவர அறிவியல் தகவல்களை பல பாடல்களிலும் விரிவாய் காணலாம்.
தாவர அறிவியல் பற்றிய செய்திகள் நவீன தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்பதை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதி வரும் வெண்முரசு நவீன நாவல் தொடரின் சில பாகங்களிலிருந்து இந்தக்கட்டுரையில் காணலாம்.
. ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க, மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ள எழுத்தாளர்களில் ஒருவர் ..வெண்முரசு எனும் இந்த நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன.. 12 புத்தகங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மாமலர் எனும் 13 ஆவது தொடர் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது. தாவரங்களையும் தாவரவியலையும் குறித்து வெண்முரசு கூறும் தகவல்கள் மற்றும் சித்தரிப்புகள் அனைத்துமே இந்நாளைய தாவரவியல் கருத்துக்களுக்கு மிகச்சரியாக ஒத்தும் சிறந்தும் விளங்குகின்றன
சங்க இலக்கியமான பாட்டும் தொகையும் தமிழிரின் அகம் மற்றும் புறவாழ்வியலை வெளிப்படுத்தும் பேரிலக்கியமாகும். எட்டுத்தொகையானது ஐந்து அக இலக்கியம், இரண்டு புற இலக்கியம் ஒரு அகப்புற இலக்கியமாகவும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் கபிலர். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைப் பட்டியலிடுகிறார். செவ்விலக்கியங்கள் என்றழைக்கப்படும் சங்கக்கவிகளில் இம்மலர்கள் குறித்த பதிவுகள் நிரம்பக் காணக்கிடக்கின்றன. இந்த ஆய்வானது குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 மலர்களின் வருகை இடங்களை எட்டுத்தொகையின் புற இலக்கியமான பதிற்றுப்பத்து மற்றும் புறநானூற்றில் இனம் கண்டு தொகுத்துரைப்பதாக அமைகின்றது.
The potential of any system, whether technological, intellectual, artistic, or cultural, is realized through change. Without it, stagnation and decline are inevitable. This principle is undeniably relevant to language, including Tamil. The Tamil of two thousand years ago has evolved greatly into the Tamil we use today reflecting the changes in our lifestyle. The contrast however arises from the fact that despite these shifts in the spoken and written form, the language's classical grammars have remained largely unchanged. Though the need for a grammar that reflects modern usage has been acknowledged, progress on this front has been slow. To ensure the vitality, richness, and global relevance of Tamil for future generations, we need to create an updated grammar built upon its classical roots. This document thus proposes the scope, guidelines, and methods for such an undertaking.
