சங்க இலக்கியங்களில் பொதிந்துள்ள வேளாண் அறிவியல் நுட்பங்கள்: தாவரவியல், மண் மேலாண்மை மற்றும் சூழலியல் சார்ந்த உழவு முறைகள் குறித்த ஆய்வு

Agricultural Science Techniques Embedded in Sangam Literature: A Study on Farming Methods Related to Botany, Soil Management, and Ecology

Authors

  • V. Prabavathy Ph.D. Research Scholar, Department of Advanced Tamil Studies, Dharmapuram Adheenam Arts College, Dharmapuram, Mayiladuthurai. Author
  • Dr. D. Karthikeyan Research Guide, Assistant Professor, Department of Advanced Tamil Studies, Dharmapuram Adheenam Arts College, Dharmapuram, Mayiladuthurai Author

Keywords:

Agriculture, Farming, Botany, (Inner Core), Organic Manure/Compost, Sangam Literature, Natural Management, Soil Health, Tholkappiyam

Abstract

Sangam Literature not only documents the life and culture of the ancient Tamils but also serves as a treasury of deep scientific and technological knowledge [1]. Specifically, information related to agriculture reveals the sophisticated practical skills and profound observations of nature held by the society of that era. This research paper aims to analyze the agricultural science concepts found in Sangam poems and Tholkappiyam from a subtle scientific perspective [1]. The practice of agriculture spanned multiple stages, from seed selection to harvest. This study highlights how our ancestors incorporated meticulously discovered agricultural knowledge, giving importance to each of these actions, into the literature [1]. Tholkappiyar's classification of plants based on their inner and outer core (, ) reflects their advanced knowledge of plant anatomy [1]. Furthermore, the use of organic manure (), based on cattle manure (or compost) and green leaf manure, was intended to create an oxygen-rich and hygienic environment necessary for root growth and microbial activity in the soil [1]. Notably, the message from the Purananuru poem, where the Kuravas (hill people) sowed millet without ploughing, utilizing the activity of the wild boar (Keazhal pig), establishes the superior technique of the ancient Tamils in integrating the functions of the ecological system into agricultural practices. Therefore, this study emphasizes that the farming methods followed by the ancient Tamils were based on sustainable and subtle scientific principles.

சங்க இலக்கியங்கள், பழந்தமிழரின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை ஆவணப்படுத்துவதுடன் மட்டுமின்றி, ஆழமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவின் களஞ்சியமாகவும் விளங்குகின்றன [1]. குறிப்பாக, வேளாண்மை தொடர்பான செய்திகள், அக்காலச் சமூகத்தின் நுட்பமான செயல் திறன்களையும், இயற்கை மீதான ஆழ்ந்த அவதானிப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆய்வுக்கட்டுரை, சங்கப் பாடல்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படும் வேளாண் அறிவியல் செய்திகளை, ஒரு நுட்பமான அறிவியல் பார்வையில் பகுப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது [1]. வேளாண் தொழில் என்பது விதைத்தேர்வு முதல் அறுவடை வரையிலான பல நிலைகள் கொண்டவையாகவே இருந்துள்ளது. இந்த ஒவ்வொரு செயலுக்கும் முக்கியத்துவம் அளித்து, நுட்பமாகக் கண்டறியப்பட்ட வேளாண் அறிவை முன்னோர்கள் இலக்கியங்களில் செலுத்தி இருப்பதை ஆய்வு முதன்மைப்படுத்துகிறது [1]. தாவரங்களை அவற்றின் அக மற்றும் புற வயிரத்தின் அடிப்படையில் (அகக்காழ், புறக்காழ்) தொல்காப்பியர் வகைப்படுத்தியமை, அவர்களின் மேம்பட்ட தாவர உடற்கூறியல் அறிவைப் பிரதிபலிக்கிறது [1]. மேலும், தொழு உரம் மற்றும் தழை உரங்களை அடிப்படையாகக் கொண்ட தாதெரு பயன்பாடுகள், மண்ணின் வேர் வளர்ச்சிக்கும், நுண்ணுயிர்களின் செயல்பாட்டிற்கும் தேவையான உயிர்வளி மற்றும் சுகாதாரச் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அமைந்திருந்தன [1]. குறிப்பாக, கேழல் பன்றியின் செயல்பாட்டைப் பயன்படுத்தி குறவர்கள் உழாமல் தினை விதைத்த புறநானூற்றுச் செய்தி, சூழலியல் அமைப்பின் செயல்பாடுகளை வேளாண்மை நடைமுறைகளில் ஒருங்கிணைக்கும் பழந்தமிழரின் உயரிய நுட்பத்தை நிறுவுகிறது. எனவே, பண்டைத் தமிழர்கள் பின்பற்றிய வேளாண்மை முறைகள், நிலையான மற்றும் நுணுக்கமான அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • V. Prabavathy, Ph.D. Research Scholar, Department of Advanced Tamil Studies, Dharmapuram Adheenam Arts College, Dharmapuram, Mayiladuthurai.

    வ. பிரபாவதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத்துறை, தருமபுரம், ஆதீனம் கலைக்கல்லூரி, தருமபுரம், மயிலாடுதுறை.

    V. Prabavathy, Ph.D. Research Scholar, Department of Advanced Tamil Studies, Dharmapuram Adheenam Arts College, Dharmapuram, Mayiladuthurai.

    Email: prabavathi0682@gmail.com

  • Dr. D. Karthikeyan, Research Guide, Assistant Professor, Department of Advanced Tamil Studies, Dharmapuram Adheenam Arts College, Dharmapuram, Mayiladuthurai

    முனைவர் து. கார்த்திகேயன், நெறியாளர், உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தருமபுரம், மயிலாடுதுறை

    Dr. D. Karthikeyan, Research Guide, Assistant Professor, Department of Advanced Tamil Studies, Dharmapuram Adheenam Arts College, Dharmapuram, Mayiladuthurai

    Email: tamilkarthik82@gmail.com

References

1. Akananuru. Compiled by: Uruthirasarmar, Commissioned by: Pandiyan Ugra Peruvaluthi. (General Edition).

2. Ilampooranar, U.P. Tholkappiyam Porulathikaram. Tirunelveli Thennindia Saiva Siddhanta Nool Pathippu Kazhagam (The South India Saiva Siddhanta Works Publishing Society), 154, T.T.K. Salai, Chennai-600 018.

3. Kalithogai. (General Edition).

4. Kurunthogai. U.V. Swaminathaiyer, Commentary. (General Edition).

5. Natrinai. (General Edition).

6. Perumpaanatruppadai. (General Edition).

7. Purananuru. U.V. Swaminathaiyer, Commentary. (General Edition).

8. Thirukkural. (General Edition)

Downloads

Published

12/25/2025

How to Cite

சங்க இலக்கியங்களில் பொதிந்துள்ள வேளாண் அறிவியல் நுட்பங்கள்: தாவரவியல், மண் மேலாண்மை மற்றும் சூழலியல் சார்ந்த உழவு முறைகள் குறித்த ஆய்வு: Agricultural Science Techniques Embedded in Sangam Literature: A Study on Farming Methods Related to Botany, Soil Management, and Ecology. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 6(02), 142-151. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/214

Similar Articles

41-50 of 55

You may also start an advanced similarity search for this article.