Abstract

சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த சாதியப் பாகுபாடுகளாலும் ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் அனுபவங்களையும் உரிமைக் குரலையும் வெளிப்படுத்தும் இலக்கியப் போக்காகத் தலித் இலக்கியம் உருவெடுத்துள்ளது. மனிதநேயத்தையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இவ்விலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் துயரங்கள், சமூகப் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு, எதிர்ப்பு உணர்வு, விடுதலை வேட்கை ஆகியவற்றைப் பதிவு செய்கிறது. ‘தலித்’ என்னும் சொல்லின் பொருள், அதன் தோற்றம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை விளக்குவதோடு, தலித் இலக்கியத்தின் உருவாக்கப் பின்னணியும் அதன் தனித்துவமான இலக்கியப் பண்புகளும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. குறிப்பாக, தலித் மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்புகள் அவர்களின் சமூக இருப்பையும் உரிமைகளையும் வெளிப்படுத்தும் ஆவணங்களாக அமைவதை இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. மேலும், தலித் இலக்கியம் வெறும் இலக்கிய வெளிப்பாடாக மட்டுமின்றி, சமூக அநீதிகளைக் கேள்விக்குட்படுத்தி சமத்துவத்தையும் சமூக நீதியையும் வலியுறுத்தும் மாற்றுக் குரலாக விளங்குவதையும் இவ்வாய்வு விளக்குகிறது.

Views & downloads

020406080Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 68 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 3 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep683
  • Article views
  • Full-text downloads

References

5 references
  1. இராஜேந்திரசோழன், தலித்தியம், உதயம் வெளியீடு, மயிலம், மு.ப.1997.
  2. க.ப.அறவாணன், தமிழ் சமுதாய வரலாறும் தமிழ் இலக்கியச் சமூகவியலும், தமிழ்க்கோட்டம், புதுச்சேரி, மு.ப.1992.
  3. மோகன்லார்பியர், தலித் விடுதலைக்கான அரசியல், தலித் ஆதார மையம், மதுரை.
  4. தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும், தி.பெ.கமலநாதன், தமிழில் ஆ.சுந்தரம்.
  5. மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம்-10; ஸ்லோகம்-48.

How to Cite

தலித் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 14-20. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/768

Similar Articles

21-30 of 589

You may also start an advanced similarity search for this article.