Abstract

தென்னிந்தியாவில் கிறித்தவ மதத்தின் வருகை குறிப்பிடத்தக்கது. வணிக நோக்கோடு உள் நுழைந்த காலனிய ஆட்சியாளர்கள் பின்னர் மதபரப்புதலையும் மேற்கொண்டனர்.சமத்துவத்தைப் போதித்த கிறித்தவத்தின் செயல்பாடுகள் இதுவரை சமத்துவத்தைக் கண்டிராத அடித்தள மக்களை ஈர்த்தது. இதனால் பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறினர். ஆதிக்க வகுப்பினரில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார உயர்வுக்காக மதமாற்றத்தை மேற்கொண்டனர். இங்கு நிலவியிருந்த சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஊறியிருந்த ஆதிக்க வகுப்பினரால் அடித்தள மக்கள் தங்களுக்குச் சரிசமமாக கிறத்தவத்தில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக, கிறித்தவத்தில் சாதிய வேறுபாடுகள் தோன்றின.ஒரு பங்கில் ஒரே பிரிவைச் சார்ந்தவர்கள் இருக்கும்போது எவ்விதச் சிக்கலும் ஏற்படுவதில்லை. மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினரைச் சார்ந்தவர்கள் இருக்கையில் அங்கு சாதிய ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. ஆலயத்திற்குள் இருவகுப்பினரும் ஒன்றாக அமர்வதை கிறித்தவம் ஏற்றுக்கொண்டாலும்,சாதியச் சிந்தனையுடைய மேல்தட்டு வகுப்பினரால் அதை ஏற்க முடியவில்லை. இவ்வாறு மதமாற்றத்திற்குப் பின்பும் சாதி அடையாளங்களும் அதன் அடிப்படையிலான வேறுபாடுகளும் பல்வேறு வடிவங்களில் கிறித்தவத்தில் தொடர்ந்ததை தொடர்வதை இக்கட்டுரை ஆராய்கிறது.

Views & downloads

0255075100Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 97 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 8 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep978
  • Article views
  • Full-text downloads

References

7 references
  1. ஐசக் அருள்தாஸ். ஜி,குமரி மண்ணில் கிறிஸ்தவம் ,ஜி. ஐசக் அருள்தாஸ் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு 2024, கன்னியாகுமரி.629602.
  2. சிவசுப்பிரமணியன். ஆ, கிறித்தவமும் தமிழ்ச்சூழலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பத்தாம் பதிப்பு 2023, நாகர்கோவில்,629001.
  3. மேலது , கிறித்தவமும் சாதியும், காலச்சுவடு பதிப்பகம், எட்டாம் பதிப்பு 2025, நாகர்கோவில்.629001.
  4. மேலது, அடித்தள மக்கள் வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,நான்காம் பதிப்பு 2023, நாகர்கோவில் ,629001.
  5. டேவிட் பாக்கியமுத்து ,திருநெல்வேலிக்கு கிறித்தவம் வந்தது, யாதுமாகி பதிப்பகம், ,முதற்பதிப்பு 2003, திருநெல்வேலி ,627002.
  6. முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லை சீமையில் கிறித்தவம், காவ்யா பதிப்பகம், முதற் பதிப்பு 2025, சென்னை ,600024.
  7. ஜார்ஜ். ர. சே.ச, கழுகுமலையில் கிளர்ச்சியும் வளர்ச்சியும் 1895, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், , இரண்டாம் பதிப்பு 2025, நாகர்கோவில் 629001.

How to Cite

தென்தமிழகக் கிறித்தவ மதமாற்றமும் சாதியும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 32-37. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/814

Similar Articles

1-10 of 584

You may also start an advanced similarity search for this article.