சுருக்கம்

மனித வாழ்வியலுக்கு ஏற்பக் கல்வி முறையும் காலந்தோறும் மாற்றமடைந்து வந்துள்ளது. மின்சாரம், கணினி ஆகிய கண்டுபிடிப்புகளுக்குப் பின் கல்வி பெரிதும் தொழில்நுட்பத்தைச் சார்ந்ததாக மாறியுள்ளது. கற்றலையும் கற்பித்தலையும் எளிமையாக்கி, கற்பவர், கற்பிப்பவர் இருவரையும் சமமாக மேம்படுத்தும் கல்வித் தொழில்நுட்பத்தின் தேவையை இக்கட்டுரை விளக்குகிறது. ஒரு தமிழ்க் கவிதையின் ஆசிரியரையும் பொருளையும் செயற்கை நுண்ணறிவுச் செயலி தவறாகக் கூறிய நேரடி அனுபவத்தின் வழியாக, செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களை ஆராயாமல் ஏற்பதன் இடர்ப்பாட்டைச் சுட்டுகிறது. சமூக ஊடகங்களை இருகூர் வாளாக மதிப்பிட்டு, அவற்றின் அடிமைத்தன விளைவுகளையும் கற்றலுக்கான பயன்களையும் எடுத்துரைக்கிறது. தமிழ் இலக்கியங்களை டிஜிட்டல் மயமாக்குவதும் தமிழ்மொழிச் செயலிகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை என்றும், கல்வியாளர்கள் தொழில்நுட்பக் கருவிகளைக் கற்று அவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் வழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் இக்கட்டுரை முடிவு செய்கிறது.

மேற்கோள்கள்

7 references
  1. லீலானந்தா.ஜி.ஜி, கல்வித்தொழில்நுட்பம், ஆசிரியர் கல்விப் பாடநெறி பதிப்பு, 1991.பக்.9
  2. Swargiary, K. (2025). Definition of Educational Technology. ResearchGate. https://doi.org/10.13140/RG.2.2.13100.99201
  3. கல்யாணராமன், நூற்றெட்டு, சூல் கவிதை, வேரல் பதிப்பகம், ஜூலை 2026,பக்.24
  4. Grant, J. E., Potenza, M. N., Weinstein, A., & Gorelick, D. A. (2010). Introduction to behavioral addictions. The American Journal of Drug and Alcohol Abuse, 36(5), 233–241. https://doi.org/10.3109/00952990.2010.491884
  5. Newport, C. (2019). Digital minimalism: Choosing a focused life in a noisy world. Portfolio.pg.16
  6. Raja, V., & Suresh, K. S. (2023). Robust and secured data hiding methodology over digital images using deep learning enabled steganographic norms. International Journal of Intelligent Systems and Applications in Engineering, 11(6s), 132–140. https://ijisae.org/index.php/IJISAE/article/view/2836
  7. Rani, S. (2020). A comprehensive research analysis of the impact of digitalization on literature. International Journal of Humanities and Education Research, 2(2), 31–33. https://www.humanitiesjournal.net/archives/2020/vol2issue2/PartA/5-2-11-284.pdf

மேற்கோள் காட்டுவது எப்படி

கல்வித் தொழில்நுட்பம். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 133-141. https://doi.org/10.63300/8fwn9905

ஒத்த கட்டுரைகள்

468-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.